20எம்பி ரியர் கேமராவுடன் மிரட்டும் ஒன்பிளஸ் 5.!

Written By:

இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மிக முக்கியமான ஸ்மார்ட்போன்கள் வரிசைகளில் ஒன்பிளஸ் 5 கண்டிப்பாக இடம்பிடிக்கும் என பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட்போன் ரசிகர்கள் எதிர்பார்த்த மிக முக்கியமான சிறப்பம்சங்களோடு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மொபைல்போன் சந்தையில் தற்போது மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த சாதனம் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் மாடல்களை விட மிகவும் சிறப்பாக உள்ளது. அதிக மக்கள் இந்த ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் வாங்குவதற்க்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த சாதனம் கடந்த ஜூன் 22-ஆம் தேதி விற்ப்பனைக்கு வந்தது, மேலும் புது டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு என பல்வேறு முக்கிய இடங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்ப்பனை செய்யப்படுகிறது, விற்ப்பனைக்கு வந்த முதல்நாள் முதல் இன்று வரை அதிகஅளவு விற்ப்பனை செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள சிறந்த மொபைல் மாடல்களில் ஒன்பிளஸ் 5 முதல் இடத்ததைப் பிடித்துள்ளது.

இந்தக் கருவி இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் மேலும் பல்வேறு மென்பொருள் மேம்பாடுகளுடன் வெளிவந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 :

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 :

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 செயலி உடன் வெளிவிந்துள்ளது, இதன் இயக்கம் மிக அருமையாகஇருக்கும் எனக் கூறப்படுகிறது, சாம்சங் போன்ற உயர்மதிப்பீடு ஸ்மார்ட்போன்கள் காட்டில், இந்த ஸ்மார்ட்போன் தரமான நன்மதீப்பிடு கொண்டவையாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6/8ஜிபி வித்தியசங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மற்ற மொபைல் மாடல்களைவிட குறைந்த விலையில் கிடைக்கிறது.

நெவர் செட்டில் :

நெவர் செட்டில் :

டேக்லைன் ஒன்ப்ளஸ் ஆனது நெவர் செட்டில் என்றஅதன் டேக்லைன் படி புதிய ஒன்ப்ளஸ் 5 சாதனத்தை இன்னும் அதிக தரம், செயல்திறன், மற்றும் குறிப்புகளுடன் வெளிப்படுத்தி உள்ளது. ஒன்ப்ளஸ் சாதனத்தை எப்போதுமே ஒரு இடைப்பட்ட ஸ்மார்ட்போனாக எதிர்பார்க்க முடியும். அப்படியான ஒன்ப்ளஸ் 5 பல திறமைகளுடன் வெளிவந்துள்ளது.

20எம்பி ரியர் கேமரா:

20எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போன் 20எம்பி ரியர் கேமராவுடன் வெளிவந்துள்ளது மேலும் மிகத்துள்ளியமான போட்டோ மற்றும் வீடியோ எடுக்க அருமையாக பயன்படும் விதத்தில் உள்ளது. ஒன்ப்ளஸ் 5 ஆனது சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியின் செயல்திறனை வெல்லக்கூடிய மிக உயர்ந்த இறுதி கேமரா ஸ்மார்ட்போனைக் கொண்டுவருவதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. மேலும் இதன் முன்புற கேமரா 16எம்பி கொண்டவையாக உள்ளது.

2.45 ஜிகாஹெர்ட்ஸ்;

2.45 ஜிகாஹெர்ட்ஸ்;

உலகின் அதிவேக மேம்பட்ட செயலிகொண்டு இந்தியாவில் வெளியாகும் முதல் மொபைல் ஒன்ப்ளஸ் 5. மேலும் இதன் 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்ட கோர் ப்ராசஸரினால் உயர்தர கிராபிக்ஸ் கொண்ட வீடியோக்களை இலகுவாக பார்க்க முடியும். மேலும் இயக்குவதற்க்கு மிக அருமையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 விளையாட்டு அம்சங்கள்:

விளையாட்டு அம்சங்கள்:

இந்த ஸ்மார்ட்போன் விளையாட்டு அம்சங்களுக்கு தகுந்தபடி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தகுந்த பாஸ்ட் சார்ஜ் பேட்டரி அமைப்புகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதிநவீன விளையாட்டுகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. 7.25 மில்லிமீட்டர் தடிமனில், ஒன்ப்ளஸ் தயாரிப்புகளில் மெல்லிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையையும் ஒன்ப்ளஸ் 5 பெற்றுள்ளது.

அதிநவீன தொழில்நுட்பம்:

அதிநவீன தொழில்நுட்பம்:

சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மிக முக்கியமான ஸ்மாட்போன்களில் இந்த ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் இடம்பெறும் என தொவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இணைப்பு சாதனங்களுடன் இக்கருவி வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதன்பின் அதிநவீன தொழில்நுட்பம் இவற்றில் இடம்பெற்றுள்ளது அதனால் விற்ப்பனையில் அதிக லாபாத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
OnePlus 5 From being a flagship killer to a true flagship; Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்