இரட்டை கேமரா அமைப்புடன் வெளிவரும் ஒன்பிளஸ் 5.!

ஒன்பிளஸ் 5 : 6ஜிபி ரேம், 64ஜிபி வரை மெமரி.!

By Prakash
|

இதுவரை ஒன்பிளஸ் 5 பிராசஸர், பெயர், சாத்தியமான நிறங்கள் மற்றும் கேமரா சார்ந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து சமீபத்திய டீசர்களில் ஒன்பிளஸ் 5 வடிவமைப்பு, உள்ளிட்டவை தெரியவந்துள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது, ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன்.

இரட்டை கேமரா அமைப்புடன்  வெளிவரும் ஒன்பிளஸ் 5.!

இந்த சாதனம் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்புடன் வருவதாக வதந்திகள் வந்துள்ளன, மேலும் ஐபோன் போன்று கட்டமைப்பு பெற்றுள்ளதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன, மேலும் முன்னர் குறிப்பிட்டபடி, இந்த கைபேசியின் கேமரா மாதிரிகள் அனைத்து இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்பின் டெலிஃபோட்டோ சென்சார்கள் இவற்றில் அமைக்கப்பட்டுள்ளன, இந்த சென்சார் பொருத்தமாட்டில் ஐபோன் 7பிளஸ்-ல் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதி செய்யும் வகையில் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் ஜூன் 15-ந்தேதி வெளியாகும் என்றே தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களும் தெரிவிக்கின்றன.

இந்தக்கருவி 6ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவை. எனக் கூறப்படுகிறது. 2.35ஜிஎச்இசெட் அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ வெய்போ தளத்தில் பதிவிட்டுள்ள தகவல்களில் ஒன்பிளஸ் 5 இதுவரை வெளியானவற்றில் மெல்லிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
OnePlus 5 camera to have similar configuration of iPhone 7 Plus : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X