OnePlus கடுப்பேத்துறார் மை லார்ட்.. குட்டி டிஸ்பிளே + Snapdragon 8 Elite Gen 6 உடன் புது T-சீரீஸ் மினி போன்!
முதலில் ஒரு குட்டிக்கதை. ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஆக சீனாவில் அறிமுகமான மாடல் இந்தியாவில் ஒன்பிளஸ்-ன் மினி ஸ்மார்ட்போன் ஆக, அதாவது காம்பாக்ட் பிளாக்ஷிப் ஆக ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகி செம்ம ஹிட் அடித்தது.
இதேபோல ஒன்பிளஸ் 15டி ஆக சீனாவில் அறிமுகமான மாடல், இந்தியாவில் ஒன்பிளஸ் 15எஸ் ஆக வெளியாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்காது, ஒன்பிளஸ் 15எஸ்-ஐ அறிமுகம் செய்யும் ஐடியா இப்போதைக்கு ஒன்பிளஸிடம் இல்லை என்கிற தகவல் நேற்று (ஜூன்.22) தான் வெளியாகி இருந்தது.

அதற்குள் இன்று (ஜூன்.23), அந்த தகவலை மேலும் உறுதிப்படுத்தும் வண்ணம், ஒன்பிளஸ் நிறுவனம் சீன சந்தைக்காக ஒன்பிளஸ் 16டி (OnePlus 16T) என்கிற அதன் அடுத்த காம்பாக்ட் ஸ்மார்ட்போனில் பணியாற்ற தொடங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கூடவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே மற்றும் சிப்செட் குறித்த விவரங்களும் லீக் ஆகியுள்ளன
சீன சமூக ஊடகத்தளமான வெய்போ (Weibo) வழியாக டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) பகிர்ந்துள்ள விவரங்களின்படி, ஒன்பிளஸ் நிறுவனம் சீன சந்தைக்காக ஒரு புதிய மினி ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. அந்த பதிவில் மாடல் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இது ஒன்பிளஸ் 16டி ஆக இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை, இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 (Qualcomm Snapdragon 8 Elite Gen 6) ப்ராசசர் உடன் சோதித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சிப்செட் மேம்பட்ட 2என்எம் உற்பத்தி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட வாய்ப்புள்ளதுடன், இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஒன்பிளஸ் 16டி ஸ்மார்ட்போன் ஆனது, ஒன்பிளஸ் 15டி மாடலை போலவே அதிக ரெஃப்ரெஷ் ரேட் (high refresh rate) உடன் கூடிய 6.3-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பிற விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் வெளியான தகவல் தெரிவிக்கிறது.
எப்போது அறிமுகம் செய்யப்படலாம்? ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டு மார்ச் மாதம் சீனாவில் வெளியிடப்பட்டது. எனவே ஒன்பிளஸ் 16டி மாடலுக்கும் இதேபோன்ற லான்ச் டைம்லைனை நாம் எதிர்பார்க்கலாம். முன்னரே குறிப்பிட்டபடி ஒன்பிளஸ் 15டி ஆனது சீனாவிற்கு வெளியே உள்ள சந்தைகளில் ஒன்பிளஸ் 15எஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் உலகளாவிய வெளியீட்டை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை;.மேலும், உலகளாவிய வெளியீட்டு திட்டங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் ஒரு புதிய லீக் தகவல் கூறுகிறது. இதே நிலை ஒன்பிளஸ் 16டி மாடலுக்கும் ஏற்படுமா அல்லது அதற்குள் நிலைமை சரி ஆகிவிடுமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 15டி விலை: ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.58,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. அடுத்தடுத்து உள்ள 12ஜிபி + 512ஜிபி, 16ஜிபி + 256ஜிபி மற்றும் 16ஜிபி + 512ஜிபி ஆப்ஷன்கள் முறையே (இந்திய ரூபாய் மதிப்பின்படி) சுமார் ரூ.67,000, ரூ.63,000 மற்றும் ரூ.71,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தன.
கடைசியாக ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-ஆஃப்-லைன் வேரியண்ட்டின் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.78,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. சீனாவில் இது ஹீலிங் ஒயிட் சாக்லேட், ப்யூர் கோகோ மற்றும் ரிலாக்ஸிங் மட்சா ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications