Home
Mobile

9000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 200MP கேமரா.. 185Hz டிஸ்பிளே.. இப்படி இருக்கனும் ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

ஸ்மார்ட்போன் வாங்கினால், இப்படிவொரு ஸ்மார்ட்போனைத்தான் வாங்கனும் என்று சொல்லும்படியான பீச்சர்களுடன் ஒன்பிளஸ் 16 (OnePlus 16) கிடைக்க இருப்பதாக தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மார்கெட்டில் கசியும்போது, ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றுவிடுகிறது. இப்போது, பிஓஎஇ (BOE) டிஸ்பிளேவின் ரெஃப்ரெஷ் ரேட் கசிந்துள்ளது.

கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பெரிய பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங், கேமரா பிரியர்களுக்கு ஏற்ப மெயின் கேமரா மற்றும் டெலிபோட்டோ கேமராவுடன் இந்த ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. ஆகவே, மற்ற பீச்சர்களும் ப்ரீமியமாகவே இருக்கும். இப்போது, டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக டிஸ்பிளே பீச்சர்கள் கசிந்துள்ளன.

9000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 200MP கேமரா.. 185Hz டிஸ்பிளே!

இந்த ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் 240Hz ரெஃப்ரெஷ் ரேட், 200Hz ரெஃப்ரெஷ் ரேட் போன்ற இதுவரையில் கிடைக்காத ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கும் என்று மார்கெட்டில் தகவல்கள் வெளியாகின. ஆனால், டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) லேட்டஸ்ட் தகவலின்படி இதில் 185Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருப்பது தெரியவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ (Snapdragon 8 Elite Gen 6 Pro) சிப்செட்டுடன் இந்த 185Hz ரெஃப்ரெஷ் ரேட் இன்டிகிரேஷன் செய்யப்படும் என்று டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் தெரிவிக்கிறது. 6.78 இன்ச் பிஓஇ (BOE) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இதில் 1.5K ரெசொலூஷன் கொடுக்கப்படுகிறது. 1 மில்லி மீட்டருக்கும் குறைவான பெசல்களை கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கும்.

பிரைட்னஸ், கலர் காமட் உள்ளிட்ட பீச்சர்கள் ஹார்ட்வேர் லெவலில் அப்கிரேட் செய்யப்பட இருக்கின்றன. இந்த விவரங்களை டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் உறுதி செய்துள்ளது. இருப்பினும், ஒன்பிளஸ் நிறுவனமானது, இதுகுறித்த எந்த விவரங்களையும் உறுதி செய்யவில்லை. அதேபோல வெளியீடு தொடர்பான விவரங்களும் உறுதி செய்யப்படவில்லை.

இருப்பினும், வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனானது, கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் சீன மார்கெட்டில் வெளியாகியது. இந்திய மார்கெட்டில் நவம்பர் மாதத்தில் வெளியாகியது. ஆகவே, இந்தாண்டின் கடைசியில் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே, சிப்செட் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், கேமரா, பேட்டரி உள்ளிட்ட மற்ற பீச்சர்களும் ஏற்கனவே மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த பீச்சர்கள் ஒன்பிளஸ் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களையும் மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. இந்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் 16 அம்சங்கள் (OnePlus 16 Specifications): 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் சாம்சங் எச்பி5 சென்சார் கிடைக்கிறது. அல்ட்ரா வைடு கேமராவில் ஜேஎன்5 சென்சாரும், பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவில் ஜேஎன்5 சென்சாரும் பேக் செய்யப்பட்டு உள்ளது.

32 செல்பீ கேமராவை இந்த ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9000mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. ஐபி69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பீச்சர்களுடன் மிட்-பிரீமியம் மாடலாக வெளியாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
OnePlus 16 With Snapdragon 8 Elite Gen 6 Pro Chipset 185Hz Display Leaked Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X