Home
Mobile

மிரண்டு போவீங்க.. 200MP கேமரா.. 9000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 165Hz டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டையும் வெயிட்டிங் மோடில் போட்டு வைத்துள்ள ஒன்பிளஸ் 16 (OnePlus 16) ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பீச்சர்கள் மீண்டும் கசிந்துள்ளன. கேமிங் பிரியர்களுக்கான மாடலாக இருக்கும் என்பதை இது உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், பட்ஜெட் உள்ளிட்ட விவரங்கள் இதோ.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனானது கடந்த அக்டோபர் மாதத்தில் சீன மார்கெட்டில் வெளியாகியது. நவம்பர் மாதத்தில் இந்தியா உள்பட குளோபல் மார்கெட்டில் வெளியாகியது. ஆகவே, இந்த அக்டோபர் மாதத்தில் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனானது, சீனாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ப பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் கசிந்து வருகின்றன.

மிரண்டு போவீங்க.. 200MP கேமரா.. 9000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்!

முன்னதாக கசிந்த டிஸ்பிளே பீச்சர்களுக்கு பதிலாக இப்போது புதிய டிஸ்பிளே பீச்சர்கள் கசிந்துள்ளன. இருப்பினும், பெரிய வித்தியாசம் இல்லை. டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக இந்த பீச்சர்கள் தெரியவந்துள்ளன. பிஓஇ எக்ஸ் (BOE X4) லைட் எமிட்டிங் மெட்டீரியலுடன் இந்த ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது.

165Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 185Hz கேமிங் ரேட் கொடுக்க இருக்கிறது. கலர்ஓஎஸ் 17 (ColorOS 17) கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது. ஆகவே, ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) எதிர்பார்க்கலாம். இந்த பீச்சர்கள் மட்டுமே லேட்டஸ்ட்டாக கசிந்துள்ளன. மற்ற பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் ஏற்கனவே கசிந்து விவரங்களுடன் ஒத்துப்போகின்றன.

ஒன்பிளஸ் 16 அம்சங்கள் (OnePlus 16 Specifications): 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்க இருக்கிறது. மெயின் கேமராவில் சாம்சங் எச்பி5 (Samsung HP5) சென்சார் மற்றும் பெரிஸ்கோப் கேமராவில் சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சார் கிடைக்கிறது. ஓம்னிவிஷன் சென்சாருடன் அல்ட்ரா வைடு கேமரா கிடைக்க இருக்கிறது.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி கொண்ட வேரியண்ட்கள் வெளியாக இருக்கின்றன. மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப் எண்ட் வேரியண்ட்டும் கிடைக்க இருக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. மேலும், 50W வயர்லெஸ் சார்ஜிங் கொடுக்கப்பட உள்ளது.

டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) இந்த ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்க இருக்கிறது. அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.70,000 பட்ஜெட்டில் இருக்கலாம்.

அதேபோல 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.1,05,000 பட்ஜெட்டில் இருக்கலாம் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் நவம்பர் மாதத்தில் இந்த ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் வெளியாக வாய்ப்புள்ளது. இங்கும் கிட்டத்தட்ட ரூ.70,000 பட்ஜெட்டில் ஆரம்ப விலை இருக்க வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus 16 With BOE X4 Display 165Hz Refresh Rate Tipped Ahead Of Launch Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X