OnePlus போட்டான் பாரு.. 200MP கேமரா.. 100W சார்ஜிங்.. 9000mAh பேட்டரி.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனத்தின் 200 எம்பி கேமரா மாடலாக ஒன்பிளஸ் 16 (OnePlus 16) வெளியாக இருக்கிறது. இப்போது, மெயின் கேமரா, பெரிஸ்கோப் டெலிபோட்டோ, அல்ட்ரா வைடு உள்ளிட்ட ரியர் கேமராவின் பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. சோனி சென்சார் கொடுக்க இருக்கிறது. ஆட்டோ போகஸ் கொண்ட செல்பீ கிடைக்க உள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் கடந்த நவம்பர் மாதத்தில் வெளியாகியது. இதற்கு முன்னதாக அக்டோபர் மாதத்தில் சீன மார்கெட்டில் வெளியாகியது. இப்போது, அதே வரிசையில் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனானது, வருகிற அக்டோபர் மாதத்தில் சீன மார்கெட்டில் வெளியாக இருக்கிறது.

இதனால், முக்கிய பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. முழு பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்தாலும், வெளியீடு நெருங்கிவருவதால், ஒன்பிளஸ் நிறுவனமே பீச்சர்களை உறுதி செய்ய தொடங்கி இருக்கிறது. இப்போது, டிரிபிள் ரியர் கேமரா செட்டப் மற்றும் செல்பீ கேமரா விவரங்களை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து இருக்கிறது.
ஒன்பிளஸ் 16 அம்சங்கள் (OnePlus 16 Specifications): 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவை இந்த ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. மெயின் கேமராவில் 1/1.4 அபெர்ச்சர் கிடைக்கிறது. அல்ட்ரா வைடு கேமராவில் 116 டிகிரி பீல்டு வியூ கிடைக்கிறது.
பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கொண்ட 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கிடைத்தது.
ஆனால், ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் 200 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. சொல்லப்போனால், ஒன்பிளஸ் மாடல்களிலேயே 200 எம்பி கேமராவுடன் கிடைக்கும் முதலாவது மாடலாக இந்த ஒன்பிளஸ் 16 இருக்கப் போகிறது. இதனாலேயே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அக்டோபர் மாதத்துக்கு முன்னதாக முக்கிய பீச்சர்கள் உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.
முன்னதாக மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். இந்த ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் ஜென் 6 (Octa Core Snapdragon 8 Elite Extreme Gen 6) சிப்செட் கொடுக்கப்பட உள்ளது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) மற்றும் கலர்ஓஎஸ் 17 (ColorOS 17) கொடுக்கப்பட உள்ளது.
185Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஓஎல்இடி டிஸ்பிளே கொடுக்கப்பட உள்ளது. 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9000mAh பேட்டரி கொடுக்கப்பட இருக்கிறது. மேலும், 50W வயர்லெஸ் சார்ஜிங் கொடுக்கப்பட உள்ளது. இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனானது, ரூ.72,999 பட்ஜெட்டில் இந்தியாவில் களமிறங்கியது.
ஆகவே, இந்த ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.80,000 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது. சீன மார்கெட்டில் சற்று குறைவாக விலைக்கு வெளியாக வாய்ப்புள்ளது. நவம்பர் மாதத்தில் குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். இங்கும் 200 எம்பி கேமராவுடன் கிடைக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications
