ஓட விட்ட OnePlus.. 9000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 200MP கேமரா.. 185Hz டிஸ்பிளே.. AI பட்டன்.. எந்த மாடல்?
ஐக்யூ, விவோ ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் பிரீமியம் கேமரா மற்றும் பெரிய பேட்டரி ஸ்மார்ட்போன்களை தூக்கி சாப்பிடும்படி ஒன்பிளஸ் 16 (OnePlus 16) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, முக்கிய பீச்சர்கள் கசிந்தன. இப்போது, டிஸ்பிளே, ஏஐ பட்டன் உள்ளிட்ட பீச்சர்கள் கசிந்துள்ளன. இந்த ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதோ.
மிட்-பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் அதிக பேட்டரி எதிர்பார்க்க முடியாது. அப்படியே இருந்தாலும், அதில் கேமரா பீச்சர்கள் சுமாராகவே இருக்கும். ஆனால், இந்த ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் ஆல் ஏரியாவிலும் பட்டையை கிளப்ப இருக்கிறது. ஏனென்றால், முன்னதாக 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே கிடைப்பதாக மார்கெட்டில் விவரங்கள் கசிந்தன.

ஆனால், இப்போது 185Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே கிடைக்க இருப்பதாக டிப்ஸ்டர் Smart Pikachu வழியாக தெரியவந்துள்ளது. மேலும், 3X ஆப்டிகல் ஜூமிங் கொண்ட 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா மற்றும் ஏஐ பட்டன் கிடைக்க இருப்பதாகவும் Smart Pikachu தளத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆகவே, பிரீமியம் ஏஐ பீச்சர்களையும் எதிர்பார்க்கலாம்.
முன்னதாக கசிந்த பீச்சர்களை பார்க்கையில், 6.78 இன்ச் எல்டிபிஓ ஓஎல்இடி (LTPO OLED) டிஸ்பிளேவை இந்த ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. பிஓஇ (BOE) மாடலாக இருப்பதால், பிரீமியம் டிஸ்பிளே அனுபவத்தை எதிர்பார்க்கலாம். ஓடிடி மற்றும் கேமிங் பிரியர்கள் விரும்பும்படி இந்த டிஸ்பிளேவின் அவுட்புட் இருக்கும். பிரீமியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம்.
ஏனென்றால், இந்த ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ (Snapdragon 8 Elite Gen 6 Pro) சிப்செட் கிடைக்க இருக்கிறது. பெரிய 9000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்க இருக்கிறது. ஆகவே, பெரிய பேட்டரியாக இருந்தாலும், வேகமாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். கூடுதலாக 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது.
200 எம்பி டெலிபோட்டோ கேமராவில் சாம்சங் எச்பி5 (Samsung HP5) சென்சார் கொடுக்கப்பட இருக்கிறது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கிடைக்க உள்ளது. டெலிபோட்டோ கேமரா போக 50 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட இருக்கிறது.
மிட்-பிரீமியம் மாடலாக இருப்பதால், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொடுக்கப்பட்டு உள்ளது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப எக்ஸ்-ஆக்சிஸ் பயோனிக் வைப்ரேஷன் மோட்டா (X-axis Bionic Vibration Motor) கிடைக்கிறது. சிம்மெட்ரிக்கல் டூயல் ஸ்பீக்கர்கள் (Symmetrical Dual Speakers) கிடைக்கிறது.
மேலும், அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. வழக்கம்போல சீன மார்கெட்டில் முதலில் வெளியாகும். பிறகு குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் வெளியாகும். ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் கடந்தாண்டு அக்டோபரில் சீன மார்கெட்டில் வெளியாகியது.
நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் குளோபல் மார்கெட்டில் வெளியாகியது. ஆகவே, இன்னும் பல மாதங்களுக்கு பிறகே இந்த ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனை எதிர்பார்க்க முடியும். ஓரிரு மாதங்களுக்கு முன்னதாகவும் வெளியாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், முக்கிய பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துவிட்டன. ஆகவே, அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications