OnePlus-ன் புரட்சி போன்.. 240Hz டிஸ்பிளே, 9000mAh பேட்டரி, 200MP கேமரா.. என்ன மாடல்?
எப்போதும் போல, ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் வரவிருக்கும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் மூலம் விஷயங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறது. அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்றால் - சந்தேகமே வேண்டாம் - ஒன்பிளஸ் 16 (OnePlus 16) மாடல் தான்.
ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் ஆனது டிஸ்பிளே தொழில்நுட்ப ஆர்வலர்களை மிகவும் கவர்ந்திழுக்கும் என்று எதிர்பார்க்கபடும் ஒரு ஸ்மார்ட்போனாக இருக்கலாம். ஏனென்றால் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன ஒன்பிளஸ், அதன் ஒன்பிளஸ் 16 மாடலில் 240ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டிற்கான ஆதரவை ஒருங்கிணைக்க விரும்புவதாக வதந்திகள் உள்ளன.

நினைவூட்டும் வண்ணம், சமீபத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் 15 மாடலில் 165ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டிற்கான ஆதரவு உள்ளது. ஆக ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் 240ஹெர்ட்ஸ் இடம்பெறும் பட்சத்தில், அதுவொரு மிகப்பெரிய பாய்ச்சல் ஆக இருக்கும். ஆனால் ஒன்பிளஸ் 15 மாடலில் உள்ளதை போலவே இது எல்லா சூழ்நிலைகளிலும் கிடைக்காது; தேர்ந்தெடுக்கப்பட்ட கேம்களில் மட்டுமே கிடைக்கலாம்
இதோடு ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனியோல் 1.5K ரெசல்யூஷன் உடனான ஒரு பிளாட் ஆன LPTO OLED BOE X5 பேனல் இடம்பெறலாம். இது ஒன்பிளஸ் 15 மாடலில் உள்ளதை போன்றது. ஒன்பிளஸ் 16 டிசைனை பொறுத்தவரை பெரும்பாலும் ஒன்பிளஸ் 15 மாடலில் உள்ளதையே போலவே இருக்கலாம்.
மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ சிப்பால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கக்கூடிய ஒரு பெரிய 9000mAh பேட்டரியையும் பேக் செய்யலாம். எல்லாவற்றை விட முக்கியமாக "முதல் முறையாக" ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 16 வழியாக 200எம்பி கேமரா சென்சாரையும் கொண்டு வரலாம்.
ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) வழியாக கிடைத்த தகவல்களின்படி, ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.3-இன்ச் எல்டிபிஎஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கு. இது 3டி அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஒரு மெட்டல் ஃப்ரேம்-ஐயும் பெறலாம்.
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் சாம்சங் JN5 டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் 7500mAh பேட்டரியும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது சரியான தகவலாக இருந்தால், ஒன்பிளஸ் 13டி மாடலில் உள்ள 6,260mAh பேட்டரியுடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாக இருக்கும்.
ஒப்பிடுகையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் 7,300mAh பேட்டரி உள்ளது. அதே நேரத்தில் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் 7,400mAh பேட்டரி உள்ளது. 2025 இல் ஒன்பிளஸ் 13டி ஆக சீனாவில் அறிமுகமான மாடல் இந்தியாவில், காம்பாக்ட் / மினி ஸ்மார்ட்போன் ஆக.. ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஆக வெளியிடப்பட்டது. இந்த பெயரிடும் முறையின் அடிப்படையில், ஒன்பிளஸ் 15டி ஆனது இங்கே ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) ஆக வரும் என்று எதிர்பார்க்கலாம்.
ஒன்பிளஸ் 15டி எப்போது அறிமுகம் செய்யப்படலாம்? என்ன விலைக்கு வரலாம்? நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஏப்ரல் 2025 இல் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக இந்தாண்டும் இதே லான்ச் டைம்லைனை (ஏப்ரல் 2026) நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








