ப்பா.. என்னா காம்பினேஷன்.. 200MP கேமரா, 9000mAh பேட்டரி உடன் புதிய OnePlus போன்.. என்ன மாடல்?
ஒன்பிளஸ் 15, ஒன்பிளஸ் 15ஆர் ஆகிய இரண்டும் உலகளவில் அறிமுகமாகி விட்டதை தொடர்ந்து ஒன்பிளஸ் 16 மாடலுக்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. இதற்கிடையில் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் ஆனது கேமரா டிப்பார்ட்மென்ட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்கிற தகவல் கிடைத்துள்ளது.
என்ன தகவல்? ஒன்பிளஸ் நிறுவனமானது ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் 200எம்பி சென்சாரை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய சந்தைகளில் 200எம்பி சென்சார் கொண்ட பல ஸ்மார்ட்போன்கள் உள்ளன, எனவே இது புதியதாக இருக்காது. இருப்பினும், ஒரு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு இது புதியதாக இருக்கும்.

இது (200எம்பி கேமரா) உண்மையாகும் பட்சத்தில் ஒன்பிளஸ் 15 உடன் ஒப்பிடும் போது ஒன்பிளஸ் 16 மாடலுக்கான குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாக இருக்கும். முன்னதாக வெளியான ஒரு லீக் - ஒன்பிளஸ் 16 மாடலில் ஒப்போ பைண்ட் என்6 (OPPO Find N6) மாடலை போன்ற ஒரு கேமரா செட்டப்பை பெறலாம் என்கிறது
ஒப்போ பைண்ட் என்6 ஸ்மார்ட்போன் ஆனது பற்றி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 50எம்பி கேமரா, 200எம்பி சென்சார் மற்றும் 2எம்பி மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார் ஆகியவைகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்ற கேமரா செட்டப்பை ஒன்பிளஸ் 16 மாடலிலும் நாம் எதிர்பார்க்கலாம்.
மற்ற அம்சங்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பிளாட் ஆன மற்றும் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இன்னொரு முக்கிய அம்சமாக - மிகப்பெரிய 9000mAh பேட்டரி இருக்கலாம்.
எப்போது அறிமுகம் செய்யப்படும்? ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் பிற்பகுதியில் (அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில், முதலில் சீனாவில்) அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் "வழக்கம் போல" உலகளாவிய சந்தைகளுக்கு வரும்.
ஒன்பிளஸ் 15டி / ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போன்: முன்னதாக இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இப்போதைக்கு வராது என்கிற தகவல் கிடைத்து இருந்தது. ஆனால் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவலின் படி, ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது சற்று முன்னதாகவே அறிமுகம் செய்யப்படலாம்.
ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டு (2026) மார்ச் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படலாம். அதாவது முன்னதாக வெளியான "டி" பிராண்டிங் ஸ்மார்ட்போன் உடன் ஒப்பிடும் போது, ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்போன் ஆனது கடந்த ஏப்ரல் 2025 இல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்பிளஸ் 13டி மாடலை போலவே இதுவும் ஒரு மினி / காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டால் இயக்கப்படும் என்று குறிப்பிட்ட டிப்ஸ்டர் கூறுகிறார். இதே சிப்செட் தான் ஒன்பிளஸ் 15 மாடலிலும் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒன்பிளஸ் 15டி / ஒன்பிளஸ் 15எஸ் மாடலில் 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.31-இன்ச் பிளாட் OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மொத்தம் 5 ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம்: 12GB+256GB, 12GB+512GB, 16GB+256GB, 16GB+512GB மற்றும் 16GB+1TB ஆப்ஷன்கள்.
இந்த ஸ்மார்ட்போன் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் 3டி அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் என்றும் கூறப்படுகிறது. கேமரா செட்டப்பில் டெலிஃபோட்டோ லென்ஸ் இடம்பெறலாம். இது IP69 ரேட்டிங்கை பெறலாம். சுமார் 194 கிராம் எடையுள்ளதாக எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 7,000mAh-ஐ விட அதிகமான பேட்டரி கெப்பாசிட்டி உடன் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








