மிட்-ரேஞ்ச் மிரளுது.. 200MP கேமரா.. 9000mA பேட்டரி.. OLED டிஸ்பிளே.. புது OnePlus போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் (OnePlus) பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 16 (OnePlus 16) ஸ்மார்ட்போனின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்ட்களானது சீன விலை விவரங்களுடன் கசிந்துள்ளன. மிட்-ரேஞ்ச் செக்மெண்ட்டில் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்கள் கிடைக்க இருப்பது தெரிகிறது மிட்-ரேஞ்ச் செக்மெண்ட்டில் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்கள் கிடைக்க இருப்பது தெரிகிறது.
கடந்த அக்டோபர் மாதத்தில் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போன் சீன மார்கெட்டில் வெளியாகியது. ஆகவே, இந்த அக்டோபர் மாதத்தில் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ப ஒன்பிளஸ் நிறுவனமும் விரைவில் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் வெளியாகும் என்பதை சமீபத்திய நிகழ்வு ஒன்றில் உறுதிப்படுத்தியது.

இப்போது, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்ட்களுடன் விலை விவரங்களும் கசிந்துள்ளன. ஒன்பிளஸ் கிளப் என்கிற எக்ஸ் தளம் வழியாக இந்த விவரங்கள் கசிந்துள்ளன. இதில் 24 ஜிபி ரேம் வேரியண்ட் இடம்பெறவில்லை. அதேபோல 8 ஜிபி ரேம் வேரியண்ட் இடம்பெற்றுள்ளது. ஆகவே, ஆரம்ப விலை சற்று கம்மியாக இருக்க வாய்ப்புள்ளது.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப் எண்ட் வேரியண்ட்டும் களமிறங்க இருக்கிறது. 4,999 சீன யுவான் விலைக்கு ஆரம்ப விலை இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.70,544 ஆக இருக்கிறது.
மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் விலை 5,499 சீன யுவான் (இந்திய மதிப்பில் ரூ.77,592) மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் விலை 5,999 சீன யுவான் (இந்திய மதிப்பில் ரூ.84,652) ஆக இருக்கப் போகிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட் விலை 7,499 சீன யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1,05,819) ஆக இருக்கப் போகிறது.
இந்திய மார்கெட் மற்றும் குளோபல் மார்கெட்டில் வெளியாகும்போது, விலையில் மாற்றங்கள் இருக்கும். இந்த விலை விவரங்களை ஒன்பிளஸ நிறுவனம் உறுதி செய்யவில்லை. மார்கெட்டில் கசிந்த விலைகளாக மட்டுமே இருக்கிறது. இதேபோல டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பீச்சரகளும் கசிந்துள்ளன.
ஒன்பிளஸ் 16 அம்சங்கள் (OnePlus 16 Specifications): 1.5K ரெசொலுஷன் கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. பிஓஇ எக்ஸ்5 (BOE X5) டிஸ்பிளே மாடலாக உள்லது. 240Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ (Octa Core Snapdragon 8 Elite Gen 6 Pro) சிப்செட்டை கொடுக்கிறது.
சாம்சங் எச்பி5 சென்சாருடன் 200 எம்பி பெரிஸ்கோப் கேமரா கிடைக்கிறது. 200 எம்பி மெயின் கேமராவும் கிடைக்க இருக்கிறது. இதுபோக அல்ட்ரா வைடு கேமரா மற்றும் செல்பீ இடம்பெற இருக்கிறது. 9000mAh பேட்டரி மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. 50W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது. இதே பீச்சர்களுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications