9000mAh பேட்டரி.. 200MP கேமரா.. சாம்ராஜ்யமே மிரளும் புது OnePlus ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் ஒன்பிளஸ் 16 (OnePlus 16) ஸ்மார்ட்போனுக்கு ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் கிளம்பி இருக்கிறது. இப்போது, 9000mAh பேட்டரி, 200 எம்பி கேமரா போன்ற டாப் பீச்சர்களுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனானது, சீனா மட்டுல்லாமல், இந்திய மார்கெட்டிலும் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இதனால், ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த நேரத்தில் பெரிஸ்கோப் கேமரா, பேட்டரி, ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பீச்சர்கள் கசிந்துள்ளன.

ஒன்பிளஸ் 16 அம்சங்கள் (OnePlus 16 Specifications): ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ (Snapdragon 8 Elite Gen 6 Pro) சிப்செட் கிடைக்க இருக்கிறது. 185Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்க இருக்கிறது. இது முந்தைய மாடலை விட அதிகமாக இருக்கிறது. 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. பிஓஇ பிளாட் ஸ்கிரீன் (BOE Flat Screen) வர இருக்கிறது.
1 எம்எம் பெசல்களுடன் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. எல்டிபிஓ கிடைக்கவும் வாய்ப்புள்ளது. 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவை கொடுக்க இருக்கிறது. 50 எம்பி பிரைமரி கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்க இருக்கிறது. ஆகவே, டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட உள்ளது. 9000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது.
இதுவும் முந்தைய மாடலைவிட அதிக கேபாசிட்டியாக இருக்கிறது. பயோனிக் எக்ஸ்-ஆக்சிஸ் வைப்ரேஷன் மோட்டார் (Bionic X-axis Vibration Motor), சிம்மெட்ரிக்கல் டூயல் ஸ்பீக்கர்கள் (Symmetrical Dual Speakers) கிடைக்கின்றன. டாப்-லெவல் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வர இருக்கிறது. ஆகவே, ஐபி69, ஐபி69கே உள்ளிட்ட ரெசிஸ்டன்ஸ் எதிர்பார்க்கலாம்.
ஏஐ பீச்சர்களை அணுகும்படி ஏஐ பட்டன் கிடைக்க இருக்கிறது. அக்டோபர் மாதம் வெளியாக வாய்ப்புள்ளது. ஆகவே, ஆக்ஸிஜன்ஓஎஸ் 17 (OxygenOS 17) மற்றும் ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) எதிர்பார்க்கலாம். இந்திய மார்கெட்டில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விலை ரூ.75,000 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, இதை ரூ.80,000 முதல் ரூ.90,000 வரையில் எதிர்பார்க்கலாம்.
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் 2025ஆம் ஆண்டு நவம்பரில் வெளியாகியது. ஆகவே, ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனும் 2026ஆம் ஆண்டில் இறுதியில் வெளியாகவே வாய்ப்புள்ளது. ஒன்பிளஸ் 15 மாடலுக்கு 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7300mAh பேட்டரி கொடுக்கப்பட்டது. ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் கேபாசிட்டி 9000mAh ஆக இருக்கிறது.
ஆகவே, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் கட்டாயம் கிடைக்கலாம். ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட்டுடன் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இதில் அப்கிரேட்செய்யப்பட்டு ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ சிப் ஒன்பிளஸ் 16 மாடலில் கிடைக்கிறது.
எப்/1.8 அபெர்சர், சோனி ஐஎம்எக்ஸ்906 சென்சார், ஓஐஎஸ் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. ஓம்னிவிஷன் சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + சோனி சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ கேமராவை ஒன்பிளஸ் 15 கொடுக்கிறது. இதில் டெலிபோட்டோவில் 200 எம்பி சென்சாரை ஒன்பிளஸ் 16 கொடுக்க உள்ளது.


Click it and Unblock the Notifications