Home
Mobile

கொஞ்சம் பொறுங்க.. 200எம்பி கேமரா.. 100W சார்ஜிங்.. வருகிறது புதிய ஒன்பிளஸ் 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 16 போனை வரும் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போன் முதலில் சீனாவில் தான் அறிமுகமாகும். அதன்பின்பு தான் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகமாகும். மேலும் இந்த போனின் சில முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது கசிந்துள்ளது.

ஒன்பிளஸ் 16 அம்சங்கள் (OnePlus 16 specifications): ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ சிப்செட் (Snapdragon 8 Elite Gen 6 Pro chipset) உடன் இந்த ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

கொஞ்சம் பொறுங்க.. வருகிறது புதிய ஒன்பிளஸ் 5ஜி போன்.. எந்த மாடல்?

அதேபோல் 6.78-இன்ச் பிளாட் டிஸ்பிளே, 200எம்பி ட்ரிபிள் ரியர் கேமராகள், ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ், 100W சார்ஜிங் போன அம்சங்கள் ஒன்பிளஸ் 16 போனில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது இந்த போனின் சில விவரங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த ஒன்பிளஸ் 16 போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் என்6 போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ஒன்பிளஸ் என்6 அம்சங்கள் (OnePlus N6 Specifications): தரமான ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6360 அபெக்ஸ் (Octa Core MediaTek Dimensity 6360 Apex) சிப்செட் உடன் ஒன்பிளஸ் என்6 போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதேபோல் 6.8-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1200 நிட்ஸ் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.

அதுவும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்சிஜென்ஓஎஸ் 16 (OxygenOS 16) மூலம் ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

குறிப்பாக IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor)வசதியும் இந்த புதிய ஒன்பிளஸ் போனில் உள்ளது.

இந்த புதிய ஒன்பிளஸ் போன் 50எம்பி ரியர் கேமரா உடன் வெளியாகி உள்ளது. குறிப்பாக 10X வரையிலான டிஜிட்டல் ஜூம் வசதியும் இந்த புதிய போனில் உள்ளது. அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

கொஞ்சம் பொறுங்க.. வருகிறது புதிய ஒன்பிளஸ் 5ஜி போன்.. எந்த மாடல்?

வெப்ப மேலாண்மைக்காக 'வேப்பர் சேம்பர்' (vapour chamber)கூலிங் டெக்னாலஜி ஆதரவு கொண்டுள்ளது ஒன்பிளஸ் என்6 போன். மேலும் MIL-STD-810H இராணுவத் தரத்திலான நீடித்து உழைக்கும் சான்றிதழ் பெற்றுள்ளது இந்த புதிய போன். யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported speaker)போன்ற வசதிகளும் இந்த புதிய போனில் உள்ளன.

இந்த போன் 8000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளியாகி உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் என்6 மாடலின் விலை ரூ.22,999-ஆக உள்ளது. மேலும் இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.24,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus 16 smartphone with 200MP camera to be launched in October
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X