Home
Mobile

அதுக்குள்ள OnePlus 16 ஆ.. வெண்ணை போல வழுக்கும் 240Hz டிஸ்பிளே.. OnePlus 15 ஐ தூக்கி சாப்பிடுமே!

ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் இன்னும் சில மணிநேரங்களில் நடக்கவுள்ளது. அவ்வளவு ஏன் இன்று இரவு 8 மணி முதல் ஒன்பிளஸ் 15 விற்பனையே தொடங்கவுள்ளது. அதற்குள் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 16 (OnePlus 16) குறித்த அம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.

நம்பகமான ஒன்பிளஸ் லீக்ஸ்களுக்கு பெயர் பெற்ற பயனர் @OnePlusClub வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவலின்படி, ஒன்பிளஸ் நிறுவனத்தின் எதிர்கால மாடலில் 240ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய டிஸ்பிளே இடம்பெறக்கூடும். ஒன்பிளஸ் நிறுவனமானது ஹை ரெசல்யூஷன் கொண்ட ஸ்க்ரீனுக்கும் 240 ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட்டிற்கும் இடையில் சமநிலையை அடைவதை குறிக்கோளாக கொண்டுள்ளது.

அதுக்குள்ள OnePlus 16 ஆ.. வெண்ணை போல வழுக்கும் 240Hz டிஸ்பிளே!

குறிப்பிடத்தக்க வகையில் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் ரெஃப்ரெஷ் ரேட்டை 120 ஹெர்ட்ஸ்-இல் இருந்து 165 ஹெர்ட்ஸ் ஆக மேம்படுத்தியுள்ளது. அதே சமயம் டிஸ்பிளே ரெசல்யூஷனை 2கே-வில் இ ருந்து 1.5கே ஆக குறைத்துள்ளது. இந்த சமரசத்தைத்தான் ஒன்பிளஸ் நிறுவனம் தவிர்க்க முயற்சிக்கிறது என்று கூறப்படுகிறது.

240 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளேயுடன் எந்த ஒன்பிளஸ் மாடல் அறிமுகமாகும் என்பதை @ஒன்பிளஸ்கிளப் குறிப்பிடவில்லை என்றாலும், போன்அரேனாவின் (PhoneArena) சமீபத்திய அறிக்கையானது இது அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் 16 (OnePlus 16) ஆக இருக்கலாம் என்று யூகித்துள்ளது.

அதிக ரெஃப்ரெஷ் ரேட் ஆனது பொதுவாக ஸ்மார்ட்போன் ஸ்க்ரீன் செயல்பாடுகளின் மென்மையை மேம்படுத்துகிறது. யுஐ (UI) முழுவதும் நேவிகேஷன் ஆனது ஸ்மூத் ஆனதாக இருக்கும், ஆப்களுக்கு இடையில் ஸ்க்ரோலிங் மற்றும் ஸ்வைப் செய்வது மென்மையாக இருக்கும். மேலும் கேம்ஸ் - மிகவும் ரெஸ்பான்சிவ் ஆக இருக்கும். மறுபுறம், இது பேட்டரி லைஃப்பையும் பாதிக்கும்; அதாவது விரைவாக பேட்டரி தீரும்.

எனவே தான் @ஒன்பிளஸ்கிளப் போஸ்ட்டில் உள்ள பெரும்பாலான பயனர்களின் கருத்துகள் - ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் 240 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் அவசியமா என்று கேள்வி எழுப்புவதாக உள்ளது. மற்றவர்கள் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் கேமரா போன்ற பிற துறைகளில் மேம்படுத்தல்களை கேட்டுள்ளனர்

இன்று மாலை ஒன்பிளஸ் 15-ன் இந்திய அறிமுகம்: ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு நிகழ்வு, இன்று (நவ.13) மாலை 7:00 மணிக்கு தொடங்கும். ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ ஒன்பிளஸ் வலைத்தளம் (OnePlus Website) அல்லது அதன் யூட்யூப் சேனல் (OnePlus YouTube Channel) மூலம் லைவ் ஸ்ட்ரீமிங் (நேரடி ஒளிபரப்பை) பார்க்கலாம்.

என்ன விலை? பீபோம் (Beebom) வலைத்தளம் வழியாக வெளியான விவரங்களின்படி ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.72,999 க்கு வாங்க கிடைக்கும். இதே ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ. 79,999 க்கு அறிமுகம் செய்யப்படும்.

மேலும் லீக் ஆன விவரங்களின்படி ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பர்பிள் கலர் ஆப்ஷன் அல்ட்ரா வயலெட் (Ultra Violet) என்று அழைக்கப்படும் மற்றும் பிளாக் கலர் ஆப்ஷன் இன்பினைட் பிளாக் (Infinite Black) என்று அழைக்கப்படும். இவைகள் அனைத்துமே லீக்டு விவரங்களாகும், அதிகாரபூர்வ விலைகள் இன்று மாலை நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் அறிவிக்கப்படும்

முன்னரே குறிப்பிட்டபடி ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விற்பனை ஆனது அது அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே தொடங்கும். இது இன்று (நவ.13) இரவு 8 மணி முதல், பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் ஒன்பிளஸ் இந்தியாவின் ஆன்லைன் ஸ்டோர் (OnePlus India online store) வழியாக வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 16 Reportedly to get 240Hz Dynamic Refresh Rate Display
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X