Home
Mobile

2026 சர்ப்ரைஸ்.. 200MP கேமராவுடன் புதிய OnePlus போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமானது - ஒன்பிளஸ் ரசிகர்களுக்கும், ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கும் மற்றும் மொபைல் போட்டோகிராஃபி பிரியர்களுக்கும் 2026 ஆம் ஆண்டில் ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸை வைத்துள்ளது போல் தெரிகிறது. இந்நிறுவனம் 200எம்பி பிரைமரி கேமரா உடனான ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது ஒன்பிளஸ் 16 (OnePlus 16) ஸ்மார்ட்போன் ஆகும். நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள ஒரு லேட்டஸ்ட் லீக் ஆனது ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் ஆனது இன்னும் அறிமுகம் செய்யப்படாத ஒப்போ பைண்ட் என்6 (Oppo Find N6) ஸ்மார்ட்போனின் ப்ரைமரி இமேஜிங் திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் என்கிறது.

2026 சர்ப்ரைஸ்.. 200MP கேமராவுடன் புதிய OnePlus போன்!

இதன் விளைவாக ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் ஆனது 200-மெகாபிக்சல் ரியர் கேமராவுடன் வரக்கூடும். ஒப்போ பைண்ட் என்6 ஸ்மார்ட்போன் ஆனது 50-மெகாபிக்சல் கேமரா, இரண்டாம் நிலை 50-மெகாபிக்சல் சென்சார் மற்றும் மூன்றாவது 200-மெகாபிக்சல் கேமரா ஆகியவற்றை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த லீக் உண்மையாகும் பட்சத்தில், முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் 15 மாடல் உடன் ஒப்பிடும் போது, ஒன்பிளஸ் 16 மாடலில் இது ஒரு மிகப்பெரிய மாற்றமாக இருக்கும். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் மூன்று 50-மெகாபிக்சல் ரியர் கேமரா செட்டப் உள்ளது.

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஆனது 165 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட், 1.5கே (1272 x 2772 பிக்சல்ஸ்) ரெசல்யூஷன், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 330 ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 100 சதவீதம் டிசிஐ-பி3 கலர் கேமட் மற்றும் 1.07 பில்லியன் கலர்களுக்கான ஆதரவு உடனான 6.78-இன்ச் மூன்றாம் தலைமுறை பிஓஇ பிளெக்சிபில் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஆனது அட்ரெனோ 840 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காமின் ஆக்டா-கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் 2 பெர்பார்மென்ஸ் கோர்கள் மற்றும் 6 எபிஷியன்ஸி கோர்களை கொண்டுள்ளது. மேலும் 4.608ஜிகாஹெர்ட்ஸ் பீக் கிளாக் ஸ்பீடையும் வழங்குகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் அல்ட்ரா பிளஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 24மிமீ ஃபோக்கல் லெங்த் உடனான 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா + 50-மெகாபிக்சல் (எப்/1.8) டெலிஃபோட்டோ கேமரா உள்ளன. இதன் ரியர் கேமரா யூனிட்டால் 30 எப்பிஎஸ்-இல் 8கே வீடியோக்களை படமாக்க முடியும். முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஸ்மாட்போன் ஆனது 7300mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 120W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவுடன் வருகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது சுமார் 39 நிமிடங்களில் 0 சதவீதத்திலிருந்து முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது ப்ராக்ஸிமிட்டி சென்சார், கைரோஸ்கோப், ஹால் சென்சார், லேசர் ஃபோகஸ் சென்சார், ஸ்பெக்ட்ரம் சென்சார், ஐஆர் பிளாஸ்டர் உட்பட பல ஆன்போர்ட் சென்சார்களை கொண்டுள்ளது. இது இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வருகிறது

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16 கொண்டு இயங்குகிறது. மேலும் இது IP66+IP68+IP69+IP69K ரேட்டிங்களை பெற்றுள்ளது. கடைசியாக அளவீடுகளை பொறுத்தவரை இன்ஃபினைட் பிளாக் மற்றும் அல்ட்ரா வயலட் ஆகிய இரண்டும் 161.4x76.7x82 மிமீ மற்றும் எடையில்சுமார் 215 கிராம் உள்ளன. இருப்பினும், சாண்ட் ஸ்டார்ம் கலர் ஆப்ஷன் சற்று மெல்லியதாகவும், இலகுவாகவும் உள்ளது. இது 81 மிமீ தடிமன் மற்றும் சுமார் 211 கிராம் எடையை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 16 Reportedly to Feature 200MP Camera Possibly One of the biggest camera update in 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X