OnePlus போட்டான் ஒரு போடு.. 9000mAh பேட்டரி, 200MP கேமரா, 200Hz டிஸ்பிளே உடன் புதிய ஸ்மார்ட்போன்!
ஏற்கனவே அறிமுகமாகி விட்ட ஒன்பிளஸ் 15, ஒன்பிளஸ் 15ஆர் மற்றும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் 15டி / ஒன்பிளஸ் 15எஸ்.. ஆகிய எல்லாவற்றையுமே தூக்கி சாப்பிடும் ஒரு புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.
அது ஒன்பிளஸ் 16 (OnePlus 16) ஸ்மார்ட்போனை குறித்த விவரங்கள் ஆகும். நம்பகமான டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் 200எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறக்கூடும். இது உண்மையாக இருந்தால் ஒன்பிளஸ் 15 மாடலில் உள்ள 50எம்பி டெலிஃபோட்டோ சென்சாரிலிருந்து இது ஒரு குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாக இருக்கும்.

மேலும் தற்போதைய மாடலின் மிதமான 1/2.76-இன்ச் சென்சாருடன் ஒப்பிடும்போது ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் கேமரா சேட்ப ஆனது மிகப்பெரிய சென்சாரைப் பயன்படுத்தும் என்றும் டிப்ஸ்டர் கூறுகிறார் - அது 1/1.எக்ஸ்-இன்ச் வரம்பில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக ஒன்பிளஸ் 16 ஆனது ஒரு வெறித்தமான கேமரா போன் ஆகவும் இருக்கும்!
இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஒன்பிளஸ் நிறுவனம் 200ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவை சோதிக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்நிறுவனம் சமீபத்தில்தான் ஒன்பிளஸ் 15 உடன் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை கொண்டுவந்தது. எனவே நேரடியாக 200ஹெர்ட்ஸ்-க்கு தாவுவது பற்றி யோசிப்பது மற்ற நிறுவனங்களுக்கு பைத்தியக்காரத்தனமானதக தோன்றலாம்.
ஆனால் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் வன்பொருள் ஆனது திறன் கொண்டதாக இருந்தாலும், இது சாத்தியம் தான். ஒன்பிளஸ் நிறுவனம் இதோடு நிறுத்தவில்லை, ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் மிகப்பெரிய 9,000mAh பேட்டரி பேக் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வந்த ஒன்பிளஸ் 15 மாடலில் 7,300mAh பேட்டரி உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது
ஒன்பிளஸ் 15டி / ஒன்பிளஸ் 15எஸ் எப்போது அறிமுகம்? ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டு (2026) மார்ச் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படலாம். அதாவது முன்னதாக வெளியான "டி" பிராண்டிங் ஸ்மார்ட்போன் உடன் ஒப்பிடும் போது, ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்போன் ஆனது கடந்த ஏப்ரல் 2025 இல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்பிளஸ் 13டி மாடலை போலவே இதுவும் ஒரு மினி / காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக வருமென்றும், இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டால் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் இதே சிப்செட் தான் ஒன்பிளஸ் 15 மாடலிலும் உள்ளது.
மேலும் ஒன்பிளஸ் 13டி எப்படி ஒன்பிளஸ் 13எஸ் ஆக அறிமுகம் ஆனதோ.. அதே போல இந்த ஸ்மார்ட்போனும் இந்தியாவிற்கு வரும் போது ஒன்பிளஸ் 15எஸ் ஆக ரீபிராண்டிங் செய்யப்படலாம். அதாவது ஒரே மாதிரியான அம்சங்களுடன் வரும். ஆனால் சீனாவில் ஒன்பிளஸ் 15டி ஆகவும், இந்தியாவில் ஒன்பிளஸ் 15எஸ் ஆகவும் வரும்.
மேலும் இதில் 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.31-இன்ச் பிளாட் OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மொத்தம் 5 ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம்: 12ஜிபி+256ஜிபி, 12ஜிபி+512ஜிபி, 16ஜிபி+256ஜிபி, 16ஜிபி+512ஜிபி மற்றும் 16ஜிபி+1டிபிஆப்ஷன்கள்.
இந்த ஸ்மார்ட்போன் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் 3டி அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் என்றும் கூறப்படுகிறது. கேமரா செட்டப்பில் டெலிஃபோட்டோ லென்ஸ் இடம்பெறலாம். இது IP69 ரேட்டிங்கை பெறலாம். சுமார் 194 கிராம் எடையுள்ளதாக எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 7,000mAh ஐ விட அதிகமான பேட்டரி கெப்பாசிட்டி உடன் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








