மார்க்கெட் காலி.. 9000mAh பேட்டரி உடன் இரண்டு 200MP கேமரா.. ஓங்கி அடிச்ச புது OnePlus போன்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்தலாம் என்கிற எல்லா வதந்திகளும், யூகங்களும் அடங்கி விட்டன. இதற்கிடையில் "திரும்பி போற ஐடியாவே இல்ல" என்று மாஸ் ஆக கூறும்படியாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை குறித்த விவரங்களும், அதில் இடம்பெறவுள்ள அப்கிரேட்கள் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன. அது ஒன்பிளஸ் 16 (OnePlus 16) மாடலாகும்.
புதிய குவால்காம் சிப்செட்: எக்ஸ் தளத்தில் OnePlus Club-ன் சமீபத்திய பதிவின்படி, ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் ஆனது அதன் முன்னோடியுடன் ஒப்பிடும்போது சில குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை பெறலாம். முதல் மற்றும் முக்கிய அப்கிரேட் - சிப்செட்டில் இருக்கும். இது இன்னும் அறிவிக்கப்படாத குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ (Snapdragon 8 Elite Gen 6 Pro) சிப்செட்டை பேக் செய்யலாம்.

இந்த சிப்செட் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 சிப்செட்டை (Snapdragon 8 Elite Gen 6 SoC) விட மிகவும் சக்திவாய்ந்த பதிப்பாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிப்செட் புதிய LPDDR6X RAM மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது LPDDR5X RAM-ஐ கொண்டுள்ளது.
டிஸ்பிளே, கேமரா மற்றும் பேட்டரியிலும் அப்கிரேட்ஸ்: ஒன்பில்ஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 15 வழியாக 165ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்பிளேவை அறிமுகம் செய்தது. இது ஒன்பிளஸ் 16 உடன் இன்னும் ஒரு படி மேலே செல்லக்கூடும் என்று தெரிகிறது. அறிக்கைகளின்படி, ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் ஆனது 1.5K ரெசல்யூஷன் உடனான புதிய 240Hz ரெஃப்ரெஷ் ரேட் OLED டிஸ்பிளேவை பேக் செய்யலாம்
இந்த மாடலில் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் மேம்படுத்தப்பட வாய்ப்புள்ளது. கேமராவை பொறுத்தவரை ஒன்பிளஸ் 16 மாடலில் 200-மெகாபிக்சல் Samsung HP5 ப்ரைமரி சென்சார் இடம்பெறலாம், மேலும் இதே போன்ற சென்சார் டெலிபோட்டோ கேமராலும் பயன்படுத்தப்படலாம். அதாவது ஒன்பிளஸ் 16 மாடலில் இரண்டு 200-மெகாபிக்சல் சென்சார்கள் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது
மேலும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் உள்ள 50-மெகாபிக்சல் கேமராவுடன் ஒப்பிடும் போது ஒன்பிளஸ் 16 மாடலின் அல்ட்ராவைடு கேமராவும் மேம்படுத்தப்படலாம். பேட்டரியைப் பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஏற்கனவே ஒரு பெரிய 7,300mAh பேட்டரியை வைத்திருந்தாலும், ஒன்பிளஸ் 16 மாடல் ஆனது 9,000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். இது 120W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலாம்.
எப்போது அறிமுகம், என்ன விலைக்கு வரலாம்? வழக்கம் போல ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் எடுத்த வேகத்தில் இந்திய சந்தைக்கு வராது. முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும். பின்னர் உலகலசிய சந்தைக்கு வரும். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஒன்பிளஸ் 16 மாடல் ஆனது சீன சந்தைக்கு மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கக்கூடும் என்கிற வதந்திகளும் உள்ளன.
டபுள் 200எம்பி கேமரா, 9000எம்ஏஎச் பேட்டரி என்கிற காம்பினேஷனை பார்க்கும் போதே இந்த சந்தேகம் எழுகிறது தான். ஆனாலும் இப்போதைக்கு எதையும் உறுதியாக கூட முடியாத. ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், சீனாவில் இது 4,999 யுவான்களுக்கு அறிமுகம் செய்யப்படலாம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.66,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








