அதிர போகுது மார்க்கெட்.. 200எம்பி கேமரா.. 9000mAh பேட்டரி.. வருகிறது புது ஒன்பிளஸ் 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்நிறுவனத்தின் போன்கள் வெளிவருகின்றன. எனவே தான் இந்நிறுவனத்தின் போன்கள் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 16 (OnePlus 16) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த போன் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. தற்போது ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 16 அம்சங்கள் (OnePlus 16 Specifications): 1.5கே எல்பிஒ ஒஎல்இடி (LTPO OLED) டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். மேலும் இதன் டிஸ்பிளேவில் 240 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (240Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. மேலும் இந்த போனில் BOE X5 பேனல் வசதியும் உள்ளது.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ 6 (Snapdragon 8 Elite Gen 6 Pro) சிப்செட் உடன் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.
200எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதியும் உள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற வசதிகள் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் உள்ளன. பின்பு 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

9000mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த போன் சற்று உயர்வான விலையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








