Home
Mobile

குறுக்க போயிடாதீங்க சார்.. புதிய OnePlus 5ஜி போன் ரெடி.. 9000mAh பேட்டரி.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் வரும் அக்டோபர் மாதம் சீனாவில் ஒன்பிளஸ் 16 (OnePlus 16) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்..

ஒன்பிளஸ் 16 அம்சங்கள் (OnePlus 16 Specifications): 6.78-இன்ச் அடுத்த தலைமுறை (next-generation) BOE ஸ்கீரின் உடன் வெளியாகும். குறிப்பாக இதன் டிஸ்பிளேவில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate), 3,200Hz instantaneous டச் சாம்பிளிங் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளியாகும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறுக்க போயிடாதீங்க சார்.. புதிய OnePlus 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ சிப்செட் (Snapdragon 8 Elite Gen 6 Pro chipset) உடன் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

கலர்ஓஎஸ் 17 சார்ந்த ஆண்ட்ராய்டு 17 இயங்குதள வசதியுடன் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

200எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த ஒன்பிளஸ் போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உடன் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) போன்ற வசதிகளும் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் உள்ளன. 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

குறுக்க போயிடாதீங்க சார்.. புதிய OnePlus 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

9000எம்ஏஎச் பேட்டரி வசதி ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருப்பதாக கூறப்படுகிறது. 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஒன்பிளஸ் போனில் உள்ளன.

அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய ஒன்பிளஸ் போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் சியோமி, விவோ நிறுவனங்களின் போன்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் இந்த ஒன்பிளஸ் 16 போன் வெளிவரும்.

photo credits: croma, oneplus

Best Mobiles in India

English summary
OnePlus 16 key specifications leaked online: Check All Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X