Home
Mobile

டீசரே சும்மா மிரட்டுதே.. புதிய ஒன்பிளஸ் 5ஜி போன் ரெடி.. 9000mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

ரெட்மி கே100 ப்ரோ சீரிஸ் மாடல்கள் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த ரெட்மி போன்களுக்கு போட்டியாக ஒன்பிளஸ் நிறுவனமும் தனது புதிய ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது

தற்போது ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு டீசரையும் வெளியிட்டுள்ளது. அந்த டீசரில் உள்ள போன் ஒன்பிளஸ் 16 மாடல் என்று கூறப்படுகிறது. அதுவும் இந்த ஒன்பிளஸ் 16 மாடல் வட்ட வடிவ கேமரா மாட்யூல் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. மேலும் ஏற்கனவே வெளியான இந்த ஒன்பிளஸ் 16 மாடலின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

டீசரே சும்மா மிரட்டுதே.. புதிய ஒன்பிளஸ் 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் 16 அம்சங்கள் (OnePlus 16 specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ சிப்செட் (Snapdragon 8 Elite Gen 6 Pro chipset) உடன் இந்த ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

6.78-இன்ச் பிளாட் LTPO OLED டிஸ்பிளே உடன் இந்த புதிய ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் 200எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த போனின் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உடன் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் போன்.

9000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

டீசரே சும்மா மிரட்டுதே.. புதிய ஒன்பிளஸ் 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் வெளியாகும். மேலும் இந்த மாடலில் பயோனிக் எக்ஸ்-ஆக்சிஸ் வைப்ரேஷன் மோட்டார் (Bionic X-axis Vibration Motor), சிம்மெட்ரிக்கல் டூயல் ஸ்பீக்கர்கள் (Symmetrical Dual Speakers) உள்ளன.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவு இந்த புதிய ஒன்பிளஸ் போனில் இருக்கும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ஒன்பிளஸ் 16 மாடல் ரூ.80,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo credits: gizmochina, oneplus

Best Mobiles in India

English summary
OnePlus 16 First Teaser Revealed: Design and Key Specifications Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X