Home
Mobile

புது OnePlus போன்.. 1மிமீ பெஸல் டிஸ்பிளே, 9000mAh க்ளேசியர் பேட்டரி, 200MP டெலி கேமரா.. எந்த மாடல்?

ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் தற்போது "ஒன்பிளஸ்" நிறுவனத்தின் பெயர் சரமாரியாக அடிபட்டு வருகிறது. இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.4000 வரை அதிகரிக்கலாம் என்கிற தகவல் வெளியாகி பலரையும் கடுப்பாக்கி உள்ளது. இதற்கிடையில் ஒன்பிளஸ் பிராண்டின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய அப்டேட் வெளியாகி - பலரையும் ஆச்சரிப்படுத்தி உள்ளது.

இங்கே அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்றால் ஒன்பிளஸ் 16 (OnePlus 16) ஆகும். சீனாவிலிருந்து வந்த ஒரு புதிய லீக், வரவிருக்கும் ஒன்பிளஸ் 16 (OnePlus 16) ஸ்மார்ட்போன் ஆனது அதன் அனைத்து பக்கங்களிலும் 1மிமீ-க்கும் குறைவான பெஸல்களை கொண்டிருக்கலாம் என்கிறது. சில அளவீடுகள் சுமார் 0.8மிமீ -ஐ கூட சுட்டிக்காட்டுகின்றன.

புது OnePlus போன்.. 1மிமீ பெஸல் டிஸ்பிளே, 9000mAh க்ளேசியர் பேட்டரி!

இது மட்டும் உண்மையாகும் பட்சத்தில்.. மேற்குறிப்பிட்ட "அளவுகள்" நடைமுறைக்கு வரும் பட்சத்தில், ஏற்கனவே மெலிதான 1.15மிமீ பார்டர்களை கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 15 மாடலை விட, ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நாம் காணலாம்.

பேப்பரில் பார்க்க, 1.15 மில்லிமீட்டரில் ஒரு சிறு பங்கை வெட்டுவது வியத்தகு முறையில் ஒரு பெரிய மாற்றமாக இருக்காது. ஆனால் கண்கள் கொண்டு பார்க்கும் போது இது நிச்சயமாக ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும். மிக மெல்லிய சமச்சீர் ஆன பெஸல்கள் "ஆல் டிஸ்பிளே" தோற்றத்தை உருவாக்குகின்றன, இது கன்டென்ட்டை இன்னும் சிறப்பானதாக மாற்றும், குறிப்பாக நீங்கள் வீடியோக்களை பார்க்கும்போது அல்லது கேமிங் செய்யும்போது.

ஒன்பிளஸ் 16 குறித்த இந்த லேட்டஸ்ட் லீக் ஆனது பெரும்பாலும் பெஸல்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஆக டிஸ்பிளே குறித்த எந்த அம்சங்களும் இன்னும் தெளிவாக இல்லை. இருப்பினும், முந்தைய வதந்திகள் இது ஒரு பிளாட் ஆன 1.5K LTPO OLED பேனலை கொண்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளன. இது மீண்டும் BOE-விடம் இருந்து பெறப்பட்டிருக்கலாம். ரெஃப்ரெஷ் ரேட் விகிதங்கள் ஆனது 240ஹெர்ட்ஸ் வரை உயரும் என்கிற பேச்சுகளும் அடிபடுகின்றன.

240ஹெர்ட்ஸ் என்பது உண்மையிலேயே சந்தைக்கு வரவுள்ளதா என்பது மற்றொரு கேள்வி. ஏனென்றால் உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் அதிக ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட பேனல்களைசோதனை கட்டத்தில் மட்டும் வைத்துள்ளனர். ஆக எப்படி பார்த்தாலும் 165ஹெர்ட்ஸ்-க்கு மேல் உள்ள எதுவுமே, ஒன்பிளஸ் 16 மாடலை பெரு "ஹை-ரெஃப்ரெஷ் ஃபிளாக்ஷிப்" ஆக மாற்றும்.

சுவாரஸ்யமாக, ஒன்பிளஸ் நிறுவனம் ஷோல்டர் ட்ரிக்கர்ஸ் அல்லது உள்ளமைக்கப்பட்ட கூலிங் பேன்கள் போன்ற கேமிங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கூடுதல் அம்சங்களை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆக ஒன்பிளஸ் நிறுவனம் திசை தெளிவாக உள்ளது: ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை ஒரு கேமிங் ஸ்மார்ட்போனிற்கு பதிலாக க்ளீன் ஆகவும், பிரீமியமாகவும் இருக்கும்.

மேலும் மிகவும் எதிர்பார்க்கும்படி, ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் ஆனது பெரும்பாலும் குவால்காமின் அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் சிப்பை தான் பேக் செய்ய வேண்டும். ஒன்பிளஸ் ஸ்மாட்ர்ட்போன்கள் செயல்திறனில் ஆண்டுதோறும் கணிக்கக்கூடிய முன்னேற்றங்களை கொண்டுவருவதால், ஒன்பிளஸ் 16 விதிவிலக்காக இருக்காது.

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் 50MP ப்ரைமரி சென்சார், 50MP அல்ட்ராவைடு மற்றும் 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது துல்லியமாக இருந்தால், குறிப்பிட்ட டெலிஃபோட்டோ செட்டப் ஆனது மிகவும் தீவிரமான மேம்படுத்தல்களில் ஒன்றாக இருக்கும், குறிப்பாக ஜூமிங் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்கும் பயனர்களை சுண்டி இழுக்கும்.

ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் பேட்டரிக்கும் பெரிய அப்கிரேட் கிடைக்கலாம். சிலிக்கான்-கார்பன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு பெரிய 9,000mAh "க்ளேசியர்" பேட்டரியை கொண்டிருக்கும் என்று சில அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. சிலிக்கான்-கார்பன் செல்கள் அதிக ஆற்றல் அடர்த்திக்கு பெயர் பெற்றவை, எனவே இது ஒன்றும் சாத்தியமற்றது அல்ல. இருப்பினும், இன்னும் உறுதியான விவரங்கள் வெளிப்படும் வரை, மேற்கண்ட விவரங்களை எல்லாம் மேலோட்டமாக எடுத்துக்கொள்வது நல்லது!

Best Mobiles in India

English summary
OnePlus 16 Display Bezel Size Could Be Below 1mm Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X