இதுதான் புதிய ஒன்பிளஸ் 5ஜி போன்.. 100W சார்ஜிங்.. 200எம்பி கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த ஒன்பிளஸ் 16 போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். இப்போது இந்த போனின் விவரங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
புதிய ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் ஆனதுடுமாரோ ஸ்டார்லைட் (Tomorrow Starlight), டார்க் ஃபாரஸ்ட் (Dark Forest) மற்றும் மார்ஷியன் மாஸ்டர்பீஸ் (Martian Masterpiece) ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் பின்புற பேனல் தனித்துவமாக இருக்கிறது. அதுவும் மற்ற போன்களை விட இந்த ஒன்பிளஸ் போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி என நான்கு வேரியண்ட்களில் இந்த ஒன்பிளஸ் 16 போன் விற்பனைக்கு வரும். அதேபோல் இந்த போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்களும் உள்ளன.
ஒன்பிளஸ் 16 அம்சங்கள் (OnePlus 16 specifications): ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ சிப்செட் (Snapdragon 8 Elite Gen 6 Pro chipset) உடன் இந்த ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

அதேபோல் 6.78-இன்ச் பிளாட் BOE X4 Flexible AMOLED டிஸ்பிளே உடன் இந்த புதிய ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் வெளிவரும். இதன் டிஸ்பிளேவில் 2கே ரெசல்யூஷன் (2K Resolution), 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் 50எம்பி பிமைரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் அறிமுகம் செய்யப்படும். இந்த போனின் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உடன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் போன்.
9000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் வெளியாகும். மேலும் இந்த மாடலில் பயோனிக் எக்ஸ்-ஆக்சிஸ் வைப்ரேஷன் மோட்டார் (Bionic X-axis Vibration Motor), சிம்மெட்ரிக்கல் டூயல் ஸ்பீக்கர்கள் (Symmetrical Dual Speakers) உள்ளன.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவு இந்த புதிய ஒன்பிளஸ் போனில் இருக்கும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ஒன்பிளஸ் 16 மாடல் சற்று உயர்வான விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
photo credits: oneplus


Click it and Unblock the Notifications
