வந்துட்டான் குட்டி பையன்.. 7500mAh பேட்டரி, IP69K உடன் புது OnePlus மினி போன் அறிமுகம்.. மாடல், விலை, SPECS!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் புதிய காம்பாக்ட் பிளாக்ஷிப் (மினி) ஸ்மார்ட்போன் ஆக ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) மாடல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் இதே மாடல் இந்தியாவில் ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) ஆக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 15டி விலை: ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.58,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்து உள்ள 12ஜிபி + 512ஜிபி, 16ஜிபி + 256ஜிபி மற்றும் 16ஜிபி + 512ஜிபி ஆப்ஷன்கள் முறையே (இந்திய ரூபாய் மதிப்பின்படி) சுமார் ரூ.67,000, ரூ.63,000 மற்றும் ரூ.71,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

கடைசியாக ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-ஆஃப்-லைன் வேரியண்ட்டின் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.78,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன் வருகிற மார்ச் 25 ஆம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வரவுள்ளது.
சீனாவில் இது ஹீலிங் ஒயிட் சாக்லேட், ப்யூர் கோகோ மற்றும் ரிலாக்ஸிங் மட்சா ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும். ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது எப்போது ரீபிராண்ட் செய்யப்படும் என்று, அதாவது இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் எப்போது ஒன்பிளஸ் 15எஸ் ஆக அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. ஏதேனும் தகவல் கிடைத்தால், அதை உடனே அப்டேட் செய்கிறோம்.
ஒன்பிளஸ் 15டி அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16 ஓஎஸ்
- டூயல் சிம் ஆதரவு
- 6.32 இன்ச் ஃபுல்-எச்டி+ (1216 x 2640 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்பிளே
- 165Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 1800 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ்
- 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- TUV ரைன்லேண்ட் ஸ்மார்ட் ஐ ப்ரொடெக்ஷன் 5.0
- லோ ப்ளூ லைட் சான்றிதழ்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 + IP69K ரேட்டிங்
- குவால்காம் 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 16ஜிபி வரையிலான LPDDR5x அல்ட்ரா ப்ரோ ரேம்
- 1டிபி வரையிலான UFS 4.1 ஆன்-போர்டு ஸ்டோரேஜ்
- ஒப்போவின் லூமோ இமேஜிங் இன்ஜின் கொண்ட டூயல் ரியர் கேமரா
- சோனி அல்ட்ரா விஷன் சென்சார் உடன் கூடிய 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா
- 3.5x ஆப்டிகல் ஜூம் மற்றும் 7x வரை லாஸ்லெஸ் டிஜிட்டல் ஜூம் திறன்களுடன் கூடிய 50-மெகாபிக்சல் (எப்/2.4) பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ
- முன்புறத்தில் 16-மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 8K/30 fps வரை வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- 7500mAh கிளேசியர் பேட்டரி
- 100W சூப்பர்வூக் வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 5ஜி, 4ஜி LTE, என்எப்சி, வைஃபை 7, ப்ளூடூத், மற்றும் ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- டிஸ்பிளேவில்அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 150.56×71.82×8.48 மிமீ
- எடையில் சுமார் 194 கிராம்


Click it and Unblock the Notifications








