OnePlus அடிச்சான் பாரு.. 7500mAh பேட்டரி.. 100W பாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. 1.5K டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனத்தின் டி சீரிஸ் மாடல்களில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) ஸ்மார்ட்போனின் கேமரா பீச்சர்கள் இப்போது கசிந்துள்ளன. ஏற்கனவே, சிப்செட், பேட்டரி போன்ற பீச்சர்கள் கசிந்தன. இப்போது, கசிந்த கேமரா பீச்சர்களை பார்க்கையில், ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பை கொண்டிருக்க வாய்ப்புள்ளது.
ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைத்தது. இதே டூயல் கேமரா செட்டப்பை ஒன்பிளஸ் 15டி கொண்டிருக்கும் என்பதை டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கசிந்த பீச்சர்களின் அடிப்படையில் தெரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால், இதிலும் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா உள்ளது.

செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. செல்பீ கேமராவும் ஒன்பிளஸ் 13டி போலவே இருக்கிறது. டிஸ்பிளேவிலும் மாற்றத்தை பார்க்க முடியாவில்லை. 6.32 இன்ச் அமோலெட் டிஸ்பிளே வர உள்ளது. இதே டிஸ்பிளே 13டி மாடலிலும் கிடைத்தது. 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. ஆகவே, டிசைனில் ஒரே மாதிரியாகவே இருக்க வாய்ப்புள்ளது.
ஆனால், மற்ற பீச்சர்களில் அப்கிரேட் இருக்கிறது. முன்னதாக கசிந்த பீச்சர்கள் ஒன்பிளஸ் 13டி போனை விட கூடுதலாக 15டி இருக்கப்போவதை காட்டுகின்றன. அதாவது, ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனில் 6260mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) கிடைத்தது. ஆனால், ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் 7500mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க உள்ளது.
ஆகவே, ஸ்லிம் பாடி மற்றும் வெயிட்டில் மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட்டை கொடுக்க உள்ளது. 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி மெமரியை கொடுக்க உள்ளது. ரிலாக்சிங் மேட்சா (Relaxing Matcha), ஹீலிங் ஒயிட் சாக்லேட் (Healing White Chocolate) மற்றும் ப்யூர் கோகோ (Pure Cocoa) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது.
மேலும், அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட உள்ளது. மேலும், மெட்டல் மிடில் ஃபிரேம் (Metal Middle Frame) உள்ளது. IP68 ரேட்டிங் மற்றும்r IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்க உள்ளது. 8.5 எம்எம் தடிமன் உள்ளது.
இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. ஒன்பிளஸ் நிறுவனம், இந்த பீச்சர்களை உறுதி செய்யவில்லை. இந்த ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) மாடலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், சீன மார்கெட்டில் வெளியான ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனே இந்தியாவில் ஒன்பிளஸ் 15எஸ் மாடலாக வந்தது.
ஒன்பிளஸ் 13எஸ் அம்சங்கள் (OnePlus 13s Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் (Octa Core Snapdragon 8 Elite 4nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. 6.32 இன்ச் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 32 எம்பி ஆட்டோ போகஸ் கேமரா கிடைக்கிறது.
5850mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இது சீன வெர்ஷனில் இருந்து மாறுபடுகிறது. ஆகவே, சீனாவில் வெளியாகும் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனுக்கும் ஒன்பிளஸ் 15எஸ் மாடலுக்கும் வேறுபாடுகள் இருக்கும். இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் மாடலின் விலை ரூ.54,999ஆக இருக்கிறது. ஆகவே, ரூ.59,999 பட்ஜெட்டில் 15டி மாடலை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








