1 மாசத்துக்கு முன்பே அறிமுகம்.. மார்க்கெட் காலி.. புது OnePlus போன்.. 16GB ரேம், 1TB மெமரி, 7000mAh பேட்டரி!
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 15 சீரீஸில் இன்னொரு புதிய மாடலை சேர்க்க உள்ளது. ஒன்பிளஸ் 15 மற்றும் ஒன்பிளஸ் 15ஆர் மாடல்களின் அறிமுகத்தை தொடர்ந்து இந்த சீரிஸின் கீழ் ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
முன்னதாக இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இப்போதைக்கு வராது என்கிற தகவல் கிடைத்து இருந்தது. ஆனால் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவலின் படி, ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது சற்று முன்னதாகவே அறிமுகம் செய்யப்படலாம்.

ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டு (2026) மார்ச் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படலாம். அதாவது முன்னதாக வெளியான "டி" பிராண்டிங் ஸ்மார்ட்போன் உடன் ஒப்பிடும் போது, ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்போன் ஆனது கடந்த ஏப்ரல் 2025 இல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்பிளஸ் 13டி மாடலை போலவே இதுவும் ஒரு மினி / காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டால் இயக்கப்படும் என்று குறிப்பிட்ட டிப்ஸ்டர் கூறுகிறார். இதே சிப்செட் தான் ஒன்பிளஸ் 15 மாடலிலும் உள்ளது.
மேலும் ஒன்பிளஸ் 13டி எப்படி ஒன்பிளஸ் 13எஸ் ஆக அறிமுகம் ஆனதோ.. அதே போல இந்த ஸ்மார்ட்போனும் இந்தியாவிற்கு வரும் போது ஒன்பிளஸ் 15எஸ் ஆக ரீபிராண்டிங் செய்யப்படலாம். அதாவது ஒரே மாதிரியான அம்சங்களுடன் வரும். ஆனால் சீனாவில் ஒன்பிளஸ் 15டி ஆகவும், இந்தியாவில் ஒன்பிளஸ் 15எஸ் ஆகவும் வரும்.
ஒன்பிளஸ் 15டி / ஒன்பிளஸ் 15எஸ் மாடலில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இதில் 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.31-இன்ச் பிளாட் OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மொத்தம் 5 ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம்: 12GB+256GB, 12GB+512GB, 16GB+256GB, 16GB+512GB மற்றும் 16GB+1TB ஆப்ஷன்கள்.
இந்த ஸ்மார்ட்போன் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் 3டி அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் என்றும் கூறப்படுகிறது. கேமரா செட்டப்பில் டெலிஃபோட்டோ லென்ஸ் இடம்பெறலாம். இது IP69 ரேட்டிங்கை பெறலாம். சுமார் 194 கிராம் எடையுள்ளதாக எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 7,000mAh ஐ விட அதிகமான பேட்டரி கெப்பாசிட்டி உடன் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் 13டி / ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- 2,160Hz PWM டிம்மிங் ரேட்
- ஆக்வா டச் 2.0 தொழில்நுட்பம்
- க்ளோவ் மோட் (இது பயனர்கள் ஈரமான அல்லது கையுறை அணிந்த கைகளால் ஸ்மார்ட்போனை இயக்க உதவும்)
- 12ஜிபி LPDDR5X ரேம்
- 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 ஓஎஸ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-
700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)
- 5850mAh பேட்டரி (இந்திய வேரியண்ட்)
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு


Click it and Unblock the Notifications








