குட்டி புலி வரான்.. மார்ச் 24 புது OnePlus மினி போன் அறிமுகம்.. 16GB ரேம், 7500mAh பேட்டரி, 100W சார்ஜிங்!
நேற்று வரையிலாக விரைவில் அறிமுகமாகும் என்று டீஸ் செய்யப்பட்டு வந்த, ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) மாடல் சரியாக எந்த தேதியில் அறிமுகமாகும் (OnePlus 15T Launch Date) என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
ஒன்பிளஸ் 15டி லான்ச் டேட்: ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது வருகிற மார்ச் 24 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து சீனாவில் ஒன்பிளஸ் 15டி மாடலுக்கான முன்பதிவுகளும் தொடங்கி உள்ளது.

சீன அறிமுகத்தை தொடர்ந்து ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) ஆக அறிமுகம் செய்யப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த முறை ஒன்பிளஸ் 13டி ஆனது ஒன்பிளஸ் 13எஸ் ஆக அறிமுகம் செய்யப்பட்டது போல; ஆனால் உடனடி அறிமுகத்தை எதிர்பார்க்க முடியாது.
ஒன்பிளஸ் 15டி ஸ்டோரேஜ் மற்றும் கலர் ஆப்ஷன்கள்: சீனாவில் ஒன்பிளஸ் 15டி ஆனது 12ஜிபி ரேம் + 256ஜிபி, 12ஜிபி ரேம் + 512ஜிபி, 16ஜிபி ஜிபி + 256ஜிபி, 16ஜிபி ரேம் + 512ஜிபி, மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி போன்ற பல ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் முன்பதிவு செய்ய கிடைக்கிறது. இது ரிலாக்ஸிங் மட்சா, ப்யூர் கோகோ, மற்றும் ஹீலிங் ஒயிட் சாக்லேட் ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வரும்.
ஒன்பிளஸ் 15டி அம்சங்கள்: செயல்திறனை மையமாக கொண்ட ஒரு காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக வெளிவரவிருக்கும் ஒன்பிளஸ் 15டி பற்றிய பல விவரங்களை ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. கூடவே லேட்டஸ்ட் லீக்ஸ் வழியாகவும் சில முக்கிய அம்சங்கள்வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவைகளின்படி:
ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது நான்கு பக்கங்களிலும் 1.1 மிமீ மிக மெல்லிய பெசல்களுடன் கூடிய 6.32-இன்ச் ஓஎல்இடி எல்டிபிஓ பேனலை கொண்டிருக்கும். இது 1.5கே ரெசல்யூஷன், 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்
ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட், LPDDR5x ரேம், UFS 4.1 ஸ்டோரேஜ் மற்றும் ஒரு பெரிய 7500mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டிருக்கும். இந்த பேட்டரி 100W வயர்டு, 50W வயர்லெஸ் மற்றும் பைபாஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும். இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான கலர் ஓஎஸ் 16 கொண்டு இயங்கும்.
ஒன்பிளஸ் 15டி முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமராவையும், பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவை கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். அதில் 3.5எக்ஸ் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் அடங்கும். மேலும், இது பிளஸ் கீ, மெட்டல் ஃபிரேம் மற்றும் IP66/68/69/69K ரேட்டிங் தூசி மற்றும் நீர் புகாத சேசிஸ் போன்ற பிற அம்சங்களையும் வழங்கும். இதன் தடிமன் 8.5 மிமீ ஆகவும், எடை சுமார் 194 கிராம் ஆகவும் இருக்கும்.
முன்னதாக இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) எல்டிபிஓ ப்ரோஎக்ஸ்டிஆர் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
-டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)
- 5850mAh பேட்டரி
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு


Click it and Unblock the Notifications








