Home
Mobile

மினி போன் வாங்கலயோ, மினி போன்.. 7500mAh பேட்டரி உடன் புது OnePlus போன்.. எந்த மாடல்?

2025 இல் அறிமுகமான ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மற்றும் ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஆகிய 2 மாடல்களுமே உங்களை இம்ப்ரெஸ் செய்யும்படியாக இல்லை என்றால், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் ஒரு புதிய டி-சீரீஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது

அது ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T ) மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் மிகவும் நெருக்கமாக உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் படியாக ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் சாத்தியமான அம்சங்கள் லீக் ஆகியுள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே இது ஒன்பிளஸ் 15 சீரிஸில் மூன்றாவது மாடலாக இருக்கும்.

7500mAh பேட்டரி உடன் புது OnePlus போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) வழியாக கிடைத்த தகவல்களின்படி, ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.3-இன்ச் எல்டிபிஎஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கு. இது 3டி அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஒரு மெட்டல் ஃப்ரேம்-ஐயும் பெறலாம்.

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் சாம்சங் JN5 டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் 7500mAh பேட்டரியும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது சரியான தகவலாக இருந்தால், ஒன்பிளஸ் 13டி மாடலில் உள்ள 6,260mAh பேட்டரியுடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாக இருக்கும்.

ஒப்பிடுகையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் 7,300mAh பேட்டரி உள்ளது. அதே நேரத்தில் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் 7,400mAh பேட்டரி உள்ளது. 2025 இல் ஒன்பிளஸ் 13டி ஆக சீனாவில் அறிமுகமான மாடல் இந்தியாவில், காம்பாக்ட் / மினி ஸ்மார்ட்போன் ஆக.. ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஆக வெளியிடப்பட்டது. இந்த பெயரிடும் முறையின் அடிப்படையில், ஒன்பிளஸ் 15டி ஆனது இங்கே ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) ஆக வரும் என்று எதிர்பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 15டி எப்போது அறிமுகம் செய்யப்படலாம்? என்ன விலைக்கு வரலாம்? நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஏப்ரல் 2025 இல் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக இந்தாண்டும் இதே லான்ச் டைம்லைனை (ஏப்ரல் 2026) நாம் எதிர்பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- 2,160Hz PWM டிம்மிங் ரேட்
- ஆக்வா டச் 2.0 தொழில்நுட்பம்
- க்ளோவ் மோட் (இது பயனர்கள் ஈரமான அல்லது கையுறை அணிந்த கைகளால் ஸ்மார்ட்போனை இயக்க உதவும்)

- 12ஜிபி LPDDR5X ரேம்
- 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 ஓஎஸ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-
700 ப்ரைமரி சென்சார்

- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)
- 5850mAh பேட்டரி (இந்திய வேரியண்ட்)
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15T Reportedly Get Battery Upgrade Launching Soon With 7500mAh Battery
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X