Home
Mobile

OnePlus-ன் 4வது புது போன்.. 7000mAh பேட்டரி மினி ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் 4வது புதிய ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளது. நவம்பர் 13 ஆம் தேதியன்று ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அதோடு சேர்த்து ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம் 2 புதிய ஸ்மார்ட்போன்கள்!

இதுவொருபக்கம் இருக்க உலகின் முதல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் ஏஸ் 6 டர்போ (OnePlus Ace 6 Turbo) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவும் ஒன்பிளஸ் திட்டமிட்டுள்ளது. இது இந்த 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம். இதே மாடலில் 8000mAh பேட்டரி இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம் 3 புதிய ஸ்மார்ட்போன்கள்!

OnePlus-ன் 4வது புது போன்.. 7000mAh பேட்டரி மினி ஸ்மார்ட்போன்!

இப்போது ஒன்பிளஸ் நிறுவனத்தின் 4வது புதிய ஸ்மார்ட்போன் குறித்த விவரம் கிடைத்துள்ளது. அது ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) மாடலாகும். ஒன்பிளஸ் 13டி மாடலில் பின்பற்றப்பட்டதை போலவே.. சீனாவில் இது ஒன்பிளஸ் 15டி என்கிற பெயரிலும், இந்தியாவில் ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) என்கிற பெயரிலும் அறிமுகமாகும்.

பெயர் வேண்டுமானால் மாறலாம் ஆனால் பேக் செய்யப்படும் அம்சங்கள் மற்றும் காம்பாக்ட் பிளாக்ஷிப் (அதாவது மினி ஸ்மார்ட்போன்) டிசைன் ஆகிய விஷயங்கள் மாறலாம் இருக்கலாம். இது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே அறிமுகமாகும் - மிக முக்கியமான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 15டி அல்லது ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் என்ன்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்பனில் 6.31-இன்ச் OLED டிஸ்பிளே இடம்பெறலாம். இது 1.5கே ரெசல்யூஷன் உடன் நான்கு பக்கங்களிலும் சம அளவிலான பெசல்களால் சூழப்பட்ட ஒரு பிளாட் டிஸ்பிளேவாக இருக்கும். பாதுகாப்பிற்காக, இது ஒரு அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டிருக்கும்.

சிப்செட்டை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது (ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் உள்ள அதே) ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 கொண்டு இயக்கப்படலாம். கேமராக்கள் பற்றி எந்த விவரங்களும் இல்லை. அதேபோல பேட்டரி அளவு குறித்த லீக்ஸ்களும் இல்லை. இருப்பினும் இதில் 7000mAh பேட்டரி உடன் வரலாம். கடைசியாக இது ஐபி68 ரேட்டிங்கையும் பெறலாம்.

2026 ஆம் ஆண்டில் காம்பாக்ட் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகும் ஒரே பிராண்ட் ஒன்பிளஸ் மட்டும் அல்ல. ஒன்பிளஸ் 15டி / ஒன்பிளஸ் 15எஸ் மாடலுக்கு போட்டியாக ஹானர் மேஜிக் 8 மினி (Honor Magic 8 Mini), ஐக்யூ 15 மினி (iQOO 15 Mini) மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் (Oppo Find X9s) ஆகிய மாடல்களும் அறிமுகம் செய்யப்படலாம்.

ஒன்பிளஸ் 15டி / ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இந்தியாவில் இது ரூ.65.,000 - 70,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரூ.64,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம், ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்தியாவில் ரூ.54,999 க்கு அறிமுகமானது.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு உடனான 5850mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15T OnePlus 13s To Get 7000mAh battery in Compact Flagship Mini Smartphone Design
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X