Home
Mobile

அடுத்த OnePlus 5ஜி போன் ரெடி.. 7500mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?

ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்து ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த புதிய போன் வரும் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு ஒன்பிளஸ் 15டி போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.

ஒன்பிளஸ் 15டி அம்சங்கள் (OnePlus 15T Specifications): 6.31-இன்ச் ஒஎல்இடி எல்டிபிஒ டிஸ்பிளே உடன் இந்த புதிய ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate), 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அடுத்த OnePlus 5ஜி போன் ரெடி.. 7500mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் உடன் இந்த புதிய ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

50எம்பி Sony IMX906 சென்சார் + 50எம்பி JN5 டெலிபோட்டோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த புதிய போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த புதிய ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் ரிலாக்சிங் மட்சா (Relaxing Matcha,) ஹீலிங் ஒயிட் சாக்லேட் (Healing White Chocolate) மற்றும் ப்யூர் ஷேட்ஸ் (Pure Cocoa shades) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதி இந்த ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் உள்ளது.

அதேபோல் IP68+IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

7500mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த புதிய போனில் உள்ளது.

குறிப்பாக ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15T Launch Timeline Leaked: check specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X