Home
Mobile

இது மினி போன் இல்ல, மினி புயல்.. 7500mAh பேட்டரி, 100W சார்ஜிங், 50MP SONY அல்ட்ரா கேமரா.. OnePlus செய்கை!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் புதிய காம்பாக்ட் (மினி) பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆக ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) வருகிற மார்ச் 24 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகமாக உள்ளது. சீன அறிமுகத்தை தொடர்ந்து, இந்தியாவில் இது ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) ஆக அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுக நாள் மிகவும் நெருக்கமாக உள்ள நிலையில், ஒன்பிளஸ் நிறுவனமானது ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை தொடர்ச்சியான முறையில் வெளிப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், தற்போது ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் கேமரா குறித்த விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இது மினி போன் இல்ல, மினி புயல்.. OnePlus செய்கை!

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் புதிய லுமோ லைட் கண்டென்சிங் இமேஜிங் சிஸ்டம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஜூம் ஹார்டுவேர் ஆகியவற்றை உறுதிப்படுத்தி உள்ளது. கூடவே பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ், புதிய போர்ட்ரெய்ட் மோட்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேப்சர் டூல்களும், ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் பகிர்ந்துள்ள விவரங்களின் படி, ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் 50-மெகாபிக்சல் சோனி அல்ட்ரா விஷன் மெயின் கேமரா (50-megapixel Sony Ultra Vision Main Camera) இடம்பெறும். இது அதிக ஒளியை படம்பிடித்து, வெவ்வேறு ஒளி நிலைகளில் சிறந்த விவரங்களை வழங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்பிளஸ் கூறுகிறது.

இந்த மெயின் கேமராவானது 3.5x ஆப்டிகல் ஜூம் வழங்கும் 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவுடன் இணைக்கப்படும். இது 7x வரை லாஸ்லெஸ் ஜூம் ஆதரவை வழங்கும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் கூறுகிறது. இது தரத்தில் குறிப்பிடத்தக்க சரிவு இல்லாமல் தொலைதூரக் காட்சிகளை கூட தெளிவாக வைத்திருக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் உள்ள லூமோ லைட் கண்டென்சிங் இமேஜிங் சிஸ்டம் ஆனது, கேமராவானது லைட் மற்றும் டெப்த்-ஐ கையாளும் விதத்தை மேம்படுத்துகிறது. இதன் விளைவாக, மிகவும் துல்லியமான வண்ணங்கள் மற்றும் சிறந்த ஒட்டுமொத்த சமநிலையுடன் கூடிய தெளிவான படங்கள் கிடைக்கின்றன.

ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் ஒன்பிளஸ் நிறுவனமானது 'ஷேடோலெஸ் கேப்சர்' (Shadowless capture) என்கிற புதிய அம்சத்தையும் அறிமுகப்படுத்துகிறது. இது, பயனர்கள் எளிமையான அசைவுகளை பயன்படுத்தி விரைவாக புகைப்படங்களை எடுக்கவும், அதே நேரத்தில் விவரங்களை தெளிவாக வைத்திருக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் கேமரா செட்டப்பில் 4கே அல்ட்ரா எச்டி லைவ் வியூ வசதியும் உள்ளது. இது, பயனர்கள் தாங்கள் படம்பிடிக்க போகும் காட்சியின் விரிவான முன்னோட்டத்தை காண அனுமதிக்கிறது.

மேலும் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் உள்ள 3.5எக்ஸ் டெலிஃபோட்டோ லென்ஸ், 85மிமீ-க்கு இணையான போக்கல் லெங்த்-ஐ வழங்குவதாகக் கூறப்படுகிறது. இது மிகவும் இயல்பான தோற்றத்தை கொடுப்பதால், நல்ல போர்ட்ரெயிட் படங்களை வழங்கும். இதோடு கிளாசிக், சாஃப்ட் லைட் மற்றும் ஃபிலிம் ஸ்டைல் ​​போன்ற பல்வேறு போர்ட்ரெயிட் ஸ்டைல்களும் இதில் அணுக கிடைக்கும். இவை ஒவ்வொன்றும் புகைப்படங்களுக்கு சற்று வித்தியாசமான மூட்-ஐயும், இறுதி தோற்றத்தையும் கொடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளன.

ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன? இது 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படும். இது ஜி2 வைஃபை சிப் மற்றும் மேம்பட்ட கேமிங் இன்புட்டிற்கான பிரத்யேக "லிங்ஸி" டச் ரெஸ்பான்ஸ் சிப் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போனில் புதிய விண்ட் சேஸர் கேமிங் கெர்னலும் இடம்பெறும். இது ஆதரிக்கப்படும் கேம்களில் 1.5கே ரெசல்யூஷனில் 165fps வரை வழங்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15T Camera Confirmed Dual 50MP Cameras With LUMO Engine Launching On March 24
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X