Home
Mobile

வந்துட்டான் டா காளை.. OnePlus-ன் புது T சீரீஸ் போன்.. 7000mAh பேட்டரி, 50MP டூயல் கேமரா, 1.5K டிஸ்பிளே!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் ஆனது ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மற்றும் ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15) ஆகிய 2 ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அதன் ஒன்பிளஸ் 15 சீரிஸில் மேலும் ஒரு புதிய ஸ்மார்ட்போனை.. மூன்றாவது மாடலை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

அது ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) ஸ்மார்ட்போன் ஆகும். இது ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்ட்போனை போலவே சக்திவாய்ந்த செயல்திறனை வழங்கும் மற்றும் காம்பாக்ட் ஆன டிசைனுடன் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் சீனாவில் ஒன்பிளஸ் 13டி ஆக வெள்யான மாடல் இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் ஆக வந்தது. ஆக ஒன்பிளஸ் 15டி ஆனது ஒன்பிளஸ் 15எஸ் ஆக வர அதிக வாய்ப்புள்ளது.

வந்துட்டான் டா காளை.. OnePlus-ன் புது T சீரீஸ் போன்.. 7000mAh பேட்டரி!

ஒன்பிளஸ் 15டி / ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் நிறுவனமானது இந்த மாடலுக்கு வெள்ளை அல்லது சாம்பல் நிற விருப்பங்களில் ஒரு மேக்நட் ஸ்னாப்-கேஸை உருவாக்குவதில் பணியாற்றி வருகிறது

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் 6.3-இன்ச் 1.5K பிளாட் டிஸ்பிளேவை இடம்பெறலாம். இது AMOLED ஆக இருக்கலாம். மேலும் இது 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டையும் ஆதரிக்கலாம் என்றும் டிப்ஸ்டர் கூறுகிறார். ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது ஒரு மெட்டல் ஃபிரேம் உடன் வரலாம்.

இது 3டி அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர 7,000mAh க்கும் அதிகமான பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை பேக் பேனலில் டெலிஃபோட்டோ சென்சார் இடம்பெறலாம்

இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் மற்றும் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் உடனான டூயல் ரியர் கேமரா செட்டப்பை பெறலாம் . சிப்செட்டை பொறுத்தவரை இது பிளாக்ஷிப் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப் மூலம் இயக்கப்படலாம் என்று முந்தைய வதந்திகள் கூறுகின்றன.

ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் ஆகும்? ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இதே மாடல் ஒன்பிளஸ் 15எஸ் என்கிற பெயரில் இந்தியா சந்தைக்குள் வரக்கூடும்,.

லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை மற்றும் சலுகைகள்: பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் அசல் விலை ரூ.47,999 என்றும், ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் அசல் விலை ரூ.52,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் அறிமுக சலுகையின் கீழ் முறையே ரூ.3000 மற்றும் ரூ.5000 பேங்க் ஆபர் (ஆக்சிஸ் மற்றும் எச்டிஎப்சி) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையை ரூ.44,999 ஆகவும், ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையை ரூ.47,999 ஆகவும் குறைக்க முடியும்.

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது சார்கோல் பிளாக் மற்றும் மின்ட் க்ரீன் ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கும். அதே நேரத்தில் ஒன்பிளஸ் 15ஆர் ஏஸ் எடிஷன் எலக்ட்ரிக் வயலட் கலரில் வாங்க கிடைக்கும். முன்பதிவு தொடங்கி விட்டது. விற்பனை டிசம்பர் 22 ஆம் தேதி முதல் ஆரம்பம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15T Battery Camera Display Specifications leaked Could launch in India as OnePlus 15s
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X