Home
Mobile

கொம்பன் இறங்கிட்டான்.. 7000mAh பேட்டரி, 100W சார்ஜிங்.. OnePlus புது மினி ஸ்மார்ட்போன்!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் ஒவ்வொரு நாளும் ஒரு டிவிஸ்ட் வைக்கிறது. முதலில் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போன் முன்கூட்டியே அறிமுகமாகும் என்கிற தகவல் வெளியானது. பின் அதோடு சேர்த்து ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற பேச்சுக்கள் அடிபட்டன.

அந்த வரிசையில் இப்போது - ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மினி ஸ்மார்ட்போன் (காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்) ஆன ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) மாடலுக்கு கிடைத்த அமோக வெற்றியை தொடரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

7000mAh பேட்டரி, 100W சார்ஜிங்.. OnePlus புது மினி ஸ்மார்ட்போன்!

ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை, டிப்ஸ்டர் சுதான்ஷு அம்போர் (Tipster Sudhanshu Ambhore @Sudhanshu1414) எக்ஸ் தளம் வழியாக லீக் செய்துள்ளார். அதன்படி ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போனில், ஒன்பிளஸ் 13எஸ் மாடலில் உள்ள அதே 6.32-இன்ச் பிளாட் 1.5K OLED டிஸ்பிளே தக்கவைக்கப்படும்.

சிப்செட்டை பொறுத்தவரை குவால்காம் நிறுவனத்தின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹைஎண்ட் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் பேக் செய்யப்படலாம். பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போனில் 7,000mAh க்கும் அதிகமாக கெப்பாசிட்டி இடம்பெறலாம். இது ஒன்பிளஸ் 13எஸ் மாடலில் உள்ள 5,850mAh பேட்டரியை விட மிகவும் பெரியதாகும்.

இதோடு ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போனில் 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலு இந்த ஸ்மார்ட்போன் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் மற்றும் மெட்டல் மிடில் ஃபிரேம் உடன் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 13டி மற்றும் ஒன்பிளஸ் 13எஸ் மாடலில் பின்பற்றப்பட்டதை போலவே, இது ஒன்பிளஸ் 15டி என சீனாவில் அறிமுகமான பின்னர் ஒன்பிளஸ் 15எஸ் என இந்தியாவில் அறிமுகமாகும். இப்போதைக்கு அறிமுக தேதி குறித்த விவரங்கள் இல்லை.

முதலில் ஒன்பிளஸ் 15 மாடல் தான் அறிமுகமாகும். முன்னரே குறிப்பிட்டபடி ஒன்பிளஸ் 15 இம்முறை முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படலாம். இது வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதை தொடர்ந்து நவம்பர் 13 ஆம் தேதி அன்று இந்தியா உட்பட உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் சில லீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனானது கடந்த 2025 ஜூன் மாதம் தான் இந்திய சந்தையில் அறிமுகமானது. ஆக ஒன்பிளஸ் 15எஸ் அறிமுகம் செய்யப்பட எப்படியும் இன்னும் சில மாதங்களாவது ஆகலாம். தற்போது - ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 54,999 க்கு வாங்க கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- 2,160Hz PWM டிம்மிங் ரேட்
- Aqua Touch 2.0 தொழில்நுட்பம்
- க்ளோவ் மோட் உடனான - 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே

- 12ஜிபி LPDDR5X ரேம்
- 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்

- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு உடனான 5850mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15s To Pack Snapdragon 8 Elite Gen 5 Chip 7000mAh Battery 100W Fast Charging Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X