Home
Mobile

7500mAh பேட்டரி கொண்ட குட்டி பையன்.. மினி ஹார்ட் அட்டாக் கொடுத்த OnePlus-ன் புது மினி போன்!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் அடுத்த மினி ஸ்மார்ட்போன் (Mini Smartphone) ஆக, அதாவது காம்பாக்ட் பிளாக்ஷிப் (Compact Flasghip) ஆக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) மாடல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட், இந்த ஸ்மார்ட்போனிற்காக காத்திருந்த பெரும்பாலான இந்திய ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஆக அறிமுகமான ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஆக அறிமுகமானது. அதைபோலபே இந்தாண்டு (கடந்த மார்ச் மாதம்) சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) மாடலானது இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 15எஸ் ஆக அறிமுகம் செய்யப்படும் என்றுபெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

மினி ஹார்ட் அட்டாக் கொடுத்த OnePlus-ன் புது மினி போன்!

இருப்பினும், மிகவும் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான யோகேஷ் பிரார் (Yogesh Brar) வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவலின்படி, ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், இந்தியாவில் ஒன்பிளஸ் 15எஸ் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்கிற கருத்து வலுப்பெற்றுள்ளது. இந்த தகவல் உண்மையாக இருந்தால், ஒன்பிளஸ்-இன் அணுகுமுறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகவும் இருக்கும்.

ஒன்பிளஸ் 15ஸ் ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை மட்டுமின்றி யோகேஷ் பிராரின் எக்ஸ் பதிவு ஒன்பிளஸ்-ன் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் குறித்தும் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்நிறுவனம் அக்டோபர் 2025-இல் சீனாவில் ஒன்பிளஸ் 15 மாடலை அறிமுகப்படுத்தியது, அதை தொடர்ந்து நவம்பரில் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

இதன் அடுத்தகட்ட மாடலான ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனும் இதே காலகட்டத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதன் இந்திய அறிமுகத்திற்கான திட்டங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று யோகேஷ் பிரார் குறிப்பிட்டுள்ளார். ஏனென்றால் சமீபத்திய மாதங்களில், ஒன்பிளஸ் தனது கவனத்தை நடுத்தர விலைப்பிரிவு (mid-range segment) தயாரிப்புகளின் பக்கம் திருப்பியுள்ளதாக தெரிகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒன்பிளஸ் நார்ட் 6 (OnePlus Nord 6), நார்த் சிஇ 6 (Nord CE 6) மற்றும் நார்த் சிஇ 6 லைட் (Nord CE 6 Lite) ஆகிய மாடல்களை உள்ளடக்கிய ஒன்பிளஸ் நார்ட் 6 சீரீஸை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. மேலும், வருகிற ஜூன் 30 ஆம் தேதி அன்று இந்தியாவில் ஒன்பிளஸ் என்6 (OnePlus N6) என்கிற முற்றிலும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஒன்பிளஸ் 16, ஒன்பிளஸ் 15எஸ் குறித்த எந்த அப்டேட்டும் இல்லை

சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 15டி விலை: ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.58,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. அடுத்தடுத்து உள்ள 12ஜிபி + 512ஜிபி, 16ஜிபி + 256ஜிபி மற்றும் 16ஜிபி + 512ஜிபி ஆப்ஷன்கள் முறையே (இந்திய ரூபாய் மதிப்பின்படி) சுமார் ரூ.67,000, ரூ.63,000 மற்றும் ரூ.71,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தன.

கடைசியாக ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-ஆஃப்-லைன் வேரியண்ட்டின் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.78,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. சீனாவில் இது ஹீலிங் ஒயிட் சாக்லேட், ப்யூர் கோகோ மற்றும் ரிலாக்ஸிங் மட்சா ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
OnePlus 15s Rebranded of 7500mAh Battery Compact Flagship Phone OnePlus 15T Unlikely to Launch in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X