இது தான் இன்ப அதிர்ச்சி.. 7500mAh பேட்டரி உடன் புது OnePlus மினி போன்.. 120W சார்ஜிங், 200MP சாம்சங் கேமரா!
ஒருபக்கம் - அடுத்தது ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) மாடல் தான், டிசம்பர் 17 இந்தியாவில் அறிமுகமாகிறது என்று அனைவரும் காத்திருக்க.. மறுபக்கம் லேட்டஸ்ட் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மாடல் ஆபர் விலையில் விற்பனை ஆகிக்கொண்டிருக்க.. இதுதான் இன்ப அதிர்ச்சி என்பது போல்.. ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மினி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன .
அது ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) மாடல் ஆகும். இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் காம்பாக்ட் பிளாக்ஷிப் (மினி ஸ்மார்ட்போன்) ஆன ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) அடுத்தபடியாக வரும் மாடல் ஆகும். கடந்த முறை நடந்ததை போலவே இந்த முறையும் சீனாவில் ஒன்பிளஸ் 15டி ஆகவும், மற்ற நாடுகளில் ஒன்பிளஸ் 15எஸ் ஆகவும் அறிமுகம் செய்யப்படலாம்.

எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15எஸ் / ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான "சற்றே சிறிய" 6.31-இன்ச் BOE X3 OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட்டை கொண்டு இயங்கலாம் என்று கூறப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது 50-மெகாபிக்சல் சோனி IMX906 அல்லது 200-மெகாபிக்சல் சாம்சங் HP5 பிரைமரி கேமராவை பேக் செய்யலாம் என்று கூறப்படுகிறது
இதனுடன் 50-மெகாபிக்சல் சாம்சங் JN5 டெலிஃபோட்டோ கேமராவும் இணைக்கப்படலாம். கவனிக்கத்தக்க வகையில் முந்தைய ஜெனெரேஷன் ஸ்மார்ட்போனில் இல்லாததால், ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போனில் அல்ட்ரா-வைட் கேமரா இடம்பெறும் என்று முந்தைய அறிக்கைகள் கூறின. இருப்பினும் இந்த புதிய லீக் - அல்ட்ரா-வைட் லென்ஸ் இருக்காது என்று கூறுகிறது.
பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15எஸ் / ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது சுமார் 7,500mAh திறன் கொண்ட ஒரு பெரிய பேட்டரியை பெறும் என்று கூறப்படுகிறது. இது 100W அல்லது 120W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரும் என்றும் புதிய லீக் கூறுகிறது. பெரும்பாலும் இது (சீனாவில்) ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான கலர் ஓஎஸ் 16 உடன் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட்டில் ஆக்ஸிஜென் ஓஎஸ் 16 யுஐ இடம்பெறலாம்.
புதிய லீக் வழியாக கிடைத்துள்ள, மேற்கண்ட எல்லா அம்சங்களையும் மேலோட்டமாக எடுத்துக்கொள்வதே நல்லது. ஏனென்றால் - மறுபடியும் - இது லீக் தகவல்கள் ஆகும். ஒன்பிளஸ் நிறுவனம் 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சீனாவில் ஒன்பிளஸ் 15டி மாடலை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அதனை தொடர்ந்து அதே மாடல் - ஒன்பிளஸ் 15எஸ் இந்தியா உட்பட உலகலாவிய சந்தைகளில் அறிமுகமாகும்.
ஒருவேளை மேற்கண்ட அம்சங்களில் பாதி உண்மையானால் கூட ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் (Oppo Find X9s), விவோ எக்ஸ்300எஸ் (Vivo X300s), ஐக்யூ 15 மினி (iQOO 15 Mini) மற்றும் ஹானர் மேஜிக் 8 மினி (Honor Magic 8 Mini) போன்ற பிற காம்பாக்ட் (மினி) ஃபிளாக்ஷிப் போன்களுக்கு - ஒன்பிளஸ் 15டி / ஒன்பிளஸ் 15எஸ் நிச்சயம் கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.


Click it and Unblock the Notifications








