டிச.17-க்கு அப்புறம் இதுதான்.. 8300mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட், டிசைன், கலர் விவரங்கள் மட்டுமே இதுவரை உறுதியாகி இருக்கிறது. ஆனால், இப்போது முழு பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். ஏனென்றால், ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் சீன மார்கெட்டில் வெளியாகிவிட்டது.
இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போனின் குளோபல் வெர்ஷனாகவே ஒன்பிளஸ் 15ஆர் இருக்கிறது. இந்தியா மற்றும் குளோபல் மார்கெட்டில் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தியாவில் ஒன்பிளஸ் பேட் கோ 2 டேப்லெட் கூடுதலாக வெளியாக இருக்கிறது. சீன வெர்ஷன் வெளியாகிவிட்டதால், 15ஆர் மாடலின் முழு பீச்சர்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம். முதலில் இந்தியாவில் உறுதி செய்யப்பட்ட பீச்சர்களை பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 15ஆர் அம்சங்கள் (OnePlus 15R Specifications): ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் மட்டுமல்லாமல், டச் ரெஸ்பான்ஸ் சிப் மற்றும் ஜி2 வை-பை சிப் கொண்ட டிரிபிள் செட்டப் கிடைக்கிறது. 120FPS கேமிங் ரேட் மற்றும் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வருகிறது.
ஆக்ஸிஜன்ஓஎஸ் 6 கிடைக்கிறது. கிரீன் மற்றும் கிரே கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. இதன் டிசைன் விவரங்கள் டீசர் மூலமாக உறுதியாகி இருக்கின்றன. இந்த பீச்சர்கள் மற்றும் டிசைனை பார்க்கையில், இது சீனாவில் வெளியான ஒன்பிளஸ் ஏஸ் 6டி மாடலின் குளோபல் வெர்ஷன் என்பது வெளிப்படையாக தெரிகிறது. ஆகவே, அந்த போனை தெரிந்து கொள்வோம்.
ஒன்பிளஸ் ஏஸ் 6டி அம்சங்கள் (OnePlus Ace 6T Specifications): 6.83 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன், 165Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஓப்போ கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் (OPPO Crystal Shield Glass) பாதுகாப்பு வருகிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.
மேலும், கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட் கிடைக்கிறது. அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. ஓஐஎஸ் டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் உள்ளது.
16 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. 8300mAh பேட்டரி மற்றும் 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) சப்போர்ட் கிடைக்கிறது. IP66 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கின்றன. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டைப்-சி ஆடியோ உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது.
சீன மார்கெட்டில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.34,000 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆகவே, இந்திய மார்கெட்டிலும் ரூ.35,000 பட்ஜெட்டுக்குள் எதிர்பார்க்கலாம். இது டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் போன்ற சலுகைகளுடன் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. டிசம்பர் 17ஆம் தேதி தெரிந்துவிடும். டிசைனில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.


Click it and Unblock the Notifications








