Home
Mobile

வயிற்றில் பாலை வார்த்த புது OnePlus மாடல்.. கம்மி பட்ஜெட்ல 8000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50MP கேமரா!

சீன மார்கெட்டில் வெளியான ஒன்பிளஸ் ஏஸ் 6 (OnePlus Ace 6) ஸ்மார்ட்போனே இந்திய மார்கெட்டில் ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) மாடலாக வெளியாகும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி ஒன்றும் இல்லை என்பதை ஒன்பிளஸ் 15ஆர் மாடலின் கசிந்த பீச்சர்கள் உறுதி செய்துவிட்டன. இது ஏற்கனவே, வெளியான ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை விட மலிவான விலைக்கு களமிறங்க இருக்கிறது.

ஒன்பிளஸ் 15 மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6 ஆகிய மாடல்கள் சீன மார்கெட்டில் வெளியாகிவிட்டன. இதில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் வெளியாகிவிட்டது. ஆனால், ஒன்பிளஸ் ஏஸ் 6 வெளியாகாமல் இருந்தது. இந்த நேரத்தில் ஒன்பிளஸ் இந்தியா நிறுவனம், ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் வெளியிட இருப்பதை உறுதி செய்தது.

வயிற்றில் பாலை வார்த்த புது OnePlus மாடல்.. கம்மி பட்ஜெட்ல வருகிறது!

ஆகவே, ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன்தான், இந்தியாவில் ஒன்பிளஸ் 15ஆர் மாடலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் கிடைக்க இருப்பது, டிப்ஸ்டர் டெபயன் ராய் (Debayan Roy) மூலமாக தெரியவந்துள்ளது. ஆகவே, இது ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனின் இந்திய வெர்ஷன் இல்லை என்பது உறுதியானது.

ஏனென்றால், ஏஸ் 6 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கிடைத்தது. இதில் அது கொடுக்கப்படவில்லை. ஆகவே, இது புதிய வெர்ஷனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ப நவம்பர் மாதத்திலேயே சீன மார்கெட்டில் ஒன்பிளஸ் ஏஸ் 6டி (OnePlus Ace 6T) வெளியாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஆகவே, இந்த மாடலின் இந்திய வெர்னாக 15ஆர் இருக்கும்.

ஒன்பிளஸ் 15ஆர் முக்கிய அம்சங்கள் (OnePlus 15R Specifications): ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் மட்டுமல்லாமல், 8000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் இதில் கிடைக்க இருக்கிறது. இது ஏஸ் 5 ஸ்மார்ட்போனைவிட அதிக பேட்டரி கேபாசிட்டியாக இருக்கிறது. ஆனால், 20W ஃபாஸ்ட் சார்ஜிங் கம்மியாக இருக்கிறது. விலையை பார்க்கையில், ரூ.44,999 இருக்க வாய்ப்புள்ளது.

இது ஏற்கனவே, வெளியான ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனைவிட மிகவும் குறைவாகும். ஆகவே, அந்த ஸ்மார்ட்போனின் பர்ஃபாமென்ஸ் மற்றும் பேட்டரி கேபாசிட்டியை இதிலும் எதிர்பார்க்கலாம். அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படலாம்.

ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: ஒன்பிளஸ் ஏஸ் 6 ஆனது 1,272 x 2,800 பிக்சல்கள், 1.5K ரெசொலூஷன், 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.83 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டுடன் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமரா செட்டப்பை பொறுத்தவரையில், 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவுடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilisation) தொழில்நுட்பம் இணைக்கப்பட்டு இருக்கிறது. 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் இதற்கு கிடைக்கிறது. 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவை முன்பக்கம் கொடுக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொடுத்துள்ளது.

பேட்டரியை பார்க்கையில், இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 ஆனது 7800mAh பேட்டரியை கொடுக்கிறது. இந்த பேட்டரிக்கு 120W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஐபி66 ரேட்டிங் மட்டுமே கொடுக்காமல், ஐபி68, ஐபி69 மற்றும் ஐபி69கே ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறு. சீனாவில் ரூ.32,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15R With Snapdragon 8 Gen 5 Launching in India Soon Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X