Home
Mobile

வாங்குனா இப்படி ஒரு போன வாங்கனும்.. 100W சார்ஜிங்.. 8000mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. புது OnePlus போன்!

இந்தியா மட்டுமல்லாமல், குளோபல் மார்கெட்டிலும் முதல் முறையாக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் கொண்ட மாடலாக ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) வெளியாக இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கும் இந்த ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மாட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மாடலுக்கு அடுத்தபடியாக இந்திய மார்கெட்டில் ஒன்பிளஸ் 15ஆர் வெளியாக இருக்கிறது. இந்தியா மற்றும் குளோபல் மார்கெட்டில் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதே தேதியில் இந்தியாவில் ஒன்பிளஸ் பேட் கோ 2 (OnePlus Pad Go 2) மாடலும் வெளியாக இருக்கிறது. இதை ஒன்பிளஸ் இந்தியா உறுதி செய்துள்ளது.

வாங்குனா இப்படி ஒரு போன வாங்கனும்.. 100W சார்ஜிங்.. 8000mAh பேட்டரி!

அதேபோல அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. ஆகவே, ஒன்பிளஸ் மற்றும் அமேசான் தளங்களில் இந்த மாடல்களுக்கான மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் கொண்ட மாடலாக ஒன்பிளஸ் 15ஆர் வெளியாகும் என்பது இப்போது உறுதியாகி இருக்கிறது.

இந்த சிப்செட் குவால்காம் நிறுவனத்தின் லேட்டஸ்ட் வெர்ஷனாகும். இதுவரையில் எந்த ஸ்மார்ட்போனுடனும் வெளியாகவில்லை. ஆகவே, இந்த சிப்செட்டுடன் வெளியாகும் முதல் மாடலாக ஒன்பிளஸ் 15ஆர் இருக்கப் போகிறது. இதனால், அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் விரும்பும் பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.

இந்த சிப்டெட் மட்டுமல்லாமல், ஐபி ரேட்டிங், ஓஎஸ் விவரங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோக பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், கேமரா மற்றும் டிஸ்பிளே பீச்சர்கள் மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. அதேபோல ஒன்பிளஸ் பேட் கோ 2 மாடலின் பீச்சர்களும் வெளியாகி இருக்கின்றன. முதலில் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் பீச்சர்களை பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 15ஆர் அம்சங்கள் (OnePlus 15R Specifications): இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் மட்டுமல்லாமல், லேட்டஸ்ட் ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) கிடைக்கிறது. அல்ட்ரா பிரீமியம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கும்படி IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கிடைக்கிறது.

சார்கோல் பிளாக் (Charcoal Black) மற்றும் மின்ட் பிரீஸ் (Mint Breeze) கலர்கள் கிடைக்க இருக்கின்றன. இவை உறுதி செய்யப்பட்ட பீச்சர்களாக இருக்கிறது. மார்கெட்டில் வெளியாகிய பீச்சர்களை பொறுத்தவரையில், இந்த ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் 8000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு வருகிறது.

6.7 இன்ச் அமோலெட் டிஸ்பிளே மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்க இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கிடைக்க இருக்கிறது. இந்தியாவில் 8 ஜிபி ரேம், 12 ஜிபி ரேம் மாடல்களை எதிர்பார்க்கலாம். ரூ.44,999 பட்ஜெட்டில் இந்திய மார்கெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. இது ஒன்பிளஸ் 15 மாடலைவிட மிகவும் குறைவான பட்ஜெட்டாகும்.

ஒன்பிளஸ் பேட் கோ 2 அம்சங்கள் (OnePlus Pad Go 2 Specifications): இந்த டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ 2 ஸ்டைலோ (OnePlus Pad Go 2 Stylo) மாடலுடன் வருகிறது. ஷேடோ பிளாக் (Shadow Black) மற்றும் லாவெண்டர் டிரைப்ட் (Lavender Drift) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த டேப்லெட் 5ஜி மாடலாக இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15R With Snapdragon 8 Gen 5 Chip To Launching on December 17 in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X