Home
Mobile

இறங்கி அடிக்குது ஆர்டர்.. ரூ.3,000 ஆஃபரில் OnePlus 15R சேல் ஆரம்பம்.. 7400mAh பேட்டரி.. 50MP சோனி கேமரா!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போனின் விற்பனை தள்ளுபடி போக தொடங்கிவிட்டது. 7400mAh பேட்டரி, 80W சார்ஜிங், சோனி சென்சார் கேமரா, அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் விற்பனை, விலை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

அமேசான் தளத்தில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.47,999ஆக இருக்கிறது. 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.52,999ஆக இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.3000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.44,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

இறங்கி அடிக்குது ஆர்டர்.. ரூ.3,000 ஆஃபரில் OnePlus 15R சேல் ஆரம்பம்!

ஒன்பிளஸ் 15ஆர் அம்சங்கள் (OnePlus 15R Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட்டை இந்த ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்டுள்ளது. 4 மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்துள்ளது.

ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) வருகிறது. இதில் பிளஸ் மைண்ட் (Plus Mind) பீச்சர் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்புடன் பிளாட் டிசைனில் டிஸ்பிளே கிடைக்கிறது. 6.83 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) பேனல் கிடைக்கிறது. மேலும், 1.5K ரெசொலூஷன் மற்றும் 165 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

மேலும், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொண்டுள்ளது. டிசி டிம்மிங் (DC Dimming) கிடைத்துள்ளது. 5 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை இந்த ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906) சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைத்துள்ளது.

வீடியோ கால்கள் மற்றும் வாய்ஸ் கால்களுக்காக 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் மற்றும் 4K ரெக்கார்டிங்கை இந்த கேமரா கொண்டுள்ளது. மேலும், கிளியர் பர்ஸ்ட் (Clear Burst), கிளியர் நைட் என்ஜின் (Clear Night Engine) போன்ற கேமரா பீச்சர்களை இந்த ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. டீடெயில்மேக்ஸ் என்ஜின் (DetailMax Engine) டெக்னாலஜி கிடைக்கிறது.

மெட்டல் மிடில் ஃபிரேம் கொண்டுள்ளது. IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கிடைக்கிறது. மேலும், IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 2 மீட்டர்கள் ஆழம் மற்றும் 30 நிமிடங்களுக்கு ஹை-பிரசர் வாட்டர் ஜெட் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. பிரீமியம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுத்து 7400mAh பேட்டரியை கொடுத்துள்ளது.

இந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைத்துள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை (Stereo Speakers) இந்த ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA/ NSA) கொடுக்கிறது.

மேலும், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 7 (Wi-Fi 7) மற்றும் ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0) கொடுக்கப்பட்டு இருக்கிறது. சார்கோல் பிளாக் (Charcoal Black), எலக்ட்ரிக் வயலட் (Electric Violet) மற்றும் மின்ட் பிரீஸ் (Mint Breeze) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. கிரையோ-வெலாசிட்டி கூலிங் சிஸ்டம் (Cryo-Velocity Cooling System) கொடுத்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15R With 7400mAh Battery Available Under Rs 45000 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X