டிசம்பர் 17 குறிச்சாச்சு.. 7400mAh பேட்டரி, 165Hz டிஸ்பிளே.. 32MP ஆட்டோ போகஸ் கேமரா.. புது OnePlus போன் வருது!
இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போனின் ஃப்ரன்ட் கேமரா விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஆட்டோ போகஸ் கொண்ட செல்பீ கேமரா கிடைக்க இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்களை இப்போது பார்க்கலாம்.
வருகிற டிசம்பர் 17ஆம் தேதி இந்த ஒன்பிளஸ் 15ஆர் வெளியாக இருக்கிறது. இந்தியா மட்டுமல்லாமல், குளோபல் மார்கெட்டிலும் இந்த ஸ்மார்ட்போன் களமிறங்க இருக்கிறது. அமேசான் விற்பனையில் (Amazon Sale) கிடைக்க இருப்பதையும் ஒன்பிளஸ் இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து பீச்சர்கள் உறுதியாகி வருகின்றன. இப்போது, ஃப்ரன்ட் கேமரா உறுதியாகிவிட்டது.

இந்த ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) கிடைக்கிறது. ஆகவே, செல்பீகள் மற்றும் வீடியோ கால்கள் பக்காவாக இருக்கும். ஒன்பிளஸ் நிறுவனம் சென்சார் குறித்து தகவல்கள் வெளியிடவில்லை. இருப்பினும், இதில் சோனி சென்சார் எதிர்பார்க்கலாம்.
சீன மார்கெட்டில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி வெளியான ஒன்பிளஸ் ஏஸ் 6டி (OnePlus Ace 6T) ஸ்மார்ட்போனின் குளோபல் வெர்ஷனாக இந்த ஒன்பிளஸ் 15ஆர் கருதப்பட்டது. டிசைன் மற்றும் கேமரா போன்றவை அப்படியே ஒரே மாதிரியாக இருந்தன. ஆனால், ஒன்பிளஸ் ஏஸ் 6டி போனில் 8300mAh பேட்டரி கிடைத்தது. ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் 7400mAh பேட்டரி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, சீன வெர்ஷன் மற்றும் குளோபல் வெர்ஷன் ஆகியவை இடையே ஹார்ட்வேர் லெவலில் மாற்றங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. இதனால், ஒன்பிளஸ் ஏஸ் 6டி போனின் டிசைனை தவிர மற்ற பீச்சர்களை இந்த ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனுடன் ஒப்பிட முடியவில்லை. இப்போது, ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் உறுதி செய்யப்பட்ட பீச்சர்களை பார்க்கலாம்.
ஒன்பிளஸ் 15ஆர் அம்சங்கள் (OnePlus 15R Specifications): இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Gen 5) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுடன் கேமிங் பிரியர்களுக்கு பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்க டச் ரெஸ்பான்ஸ் சிப் மற்றும் கனெக்டிவிட்டி கொடுக்க ஜி2 வை-பை சிப் கூடுதலாக கிடைக்கின்றன.
120 FPS கொண்ட பிளாட் டிஸ்பிளே கிடைக்கிறது. மேலும், 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் 7400mAh பேட்டரி கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இதில் டீடெயில்மேக்ஸ் என்ஜின் (DetailMax Engine) கிடைக்கிறது. மேலும், அல்ட்ரா கிளியர் மோட் (Ultra Clear Mode) உள்ளது.
இதுபோக கிளியர் பர்ஸ்ட் (Clear Burst) மற்றும் கிளியர் நைட் என்ஜின் (Clear Night Engine) கொண்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனுக்கு IP66, IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. மேலும், IP69K ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ஸ் உள்ளது. ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) கிடைக்கிறது. மூன்று கலர்களில் கிடைக்கிறது.
கிரே, கிரீன் மற்றும் வயலெட் ஆகிய கலர்கள் இருக்கின்றன. ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்பீ மட்டுமே கிடைத்தது. ஆனால், இதில் 32 எம்பி செல்பீ கிடைக்கிறது. சீனாவில் ஏஸ் 6டி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.33,150 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆகவே, இந்திய மார்கெட்டில் ரூ.34,999 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








