அடிச்சான் பாருங்க OnePlus.. ரூ.3,000 டிஸ்கவுண்ட்டில் 7400mAh பேட்டரி ஸ்மார்ட்போன்.. 12GB ரேம், 512GB ஸ்டோரேஜ்!
ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போனில் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் களமிறங்கி இருக்கிறது. ரூ.3,000 டிஸ்கவுண்ட் விலையில் கிடைப்பதால், ஒன்பிளஸ் பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற ஸ்மார்ட்போன் பிரியர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்திய மார்கெட்டில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் மட்டும் வெளியாகின. 7400mAh பேட்டரி, 80W சார்ஜிங், ஓஐஎஸ் கேமரா போன்ற பீச்சர்களில் பட்டையை கிளப்பியதால், விற்பனையிலும் வரவேற்பை பெற்றது.

இந்த வரவேற்பை டபுள் மடங்காக மாற்ற புதிய வேரியண்ட்டை ஒன்பிளஸ் நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.3,000 தள்ளுபடி போக இந்த வேரியண்ட் கிடைக்கிறது. அதாவது, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.59,999 ஆக இருக்கிறது.
இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.56,999 விலைக்கு இந்த ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கும் கஸ்டமர்களுக்கு இந்த ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கும். ஈஎம்ஐ விரும்பாத கஸ்டமர்களுக்கு ரூ.1,799 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 15ஆர் 5ஜி அம்சங்கள் (OnePlus 15R 5G Specifications): 6.83 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சனை கொடுத்து இருக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 1800 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் மற்றும் 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.
மேலும், 165Hz ரெஃரெஷ் ரேட் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டு உள்ளது. கலர் என்ஹான்ஸ்மெண்ட் கொண்ட டிஸ்பிளே மாடலாக இருக்கிறது. அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிபாகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மட்டுமல்லாமல், 4 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்து இருக்கிறது. பிளஸ் மைண்ட் (Plus Mind) உள்ளிட்ட பிரத்யேக பீச்சர்களுடன் ஆக்ஸிஜன்ஓஸ் 16 (OxygenOS 16) கொடுக்கப்பட்டு உள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.
இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவுடன் கிடைக்கிறது. வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்காக முன்பக்கம் 32 எம்பி கேமராவை இந்த ஒன்பிளஸ் 15ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7400mAh பேட்டரியை பேக் செய்துள்ளது.
இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor) உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. சார்கோல் பிளாக் (Charcoal Black), மின்ட் ப்ரீஸ் (Mint Breeze), எலக்ட்ரிக் வயலெட் (Electric Violet) கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications