நாளை இந்தியாவில் அறிமுகமாகும் புது OnePlus 5ஜி போன்.. 7400mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?
மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போன் ஆனது நாளை (டிசம்பர் 17) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக நாளை மாலை 7 மணி அளவில் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும். மேலும் இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஒன்பிளஸ் 15ஆர் அம்சங்கள் (OnePlus 15R Specifications): 6.7-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz Refresh Rate), 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

தரமான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Gen 5 chipset) உடன் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) ஆதரவும் இந்த ஒன்பிளஸ் போனில் உள்ளது.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. ஓர்ஜின்ஓஎஸ் 16 (OxygenOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் இயங்கும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

7400mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் வெளிவரும். சார்கோல் பிளாக், மின்ட் கிரீன் (Mint Green), Electric Violet (எலக்ட்ரிக் வயலட்) உள்ளிட்ட நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.47,000 பட்ஜெட்டில் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








