OnePlus 15-ல் உள்ள அதே கேமரா.. 7400mAh பேட்டரி.. ஆனா விலை கம்மி.. அடிதூள் பறக்கும் புது OnePlus போன்!
ஒன்பிளஸ் 15 மாடலை தொடர்ந்து, அதே ஒன்பிளஸ் 15 சீரீஸின் கீழ் ஒரு புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அது ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) மாடல் ஆகும். இது வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அறிமுக தேதி மிகவும் நெருக்கமாக உள்ளதால், ஒன்பிளஸ் நிறுவனமானது ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை, ஒவ்வொன்றாக உறுதிப்படுத்தி வருகிறது. ஏற்கனவே டிஸ்பிளே, சிப்செட், ரியர் கேமரா, பேட்டரி மற்றும் ஐபி ரேட்டிங் குறித்த விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது செல்பீ கேமரா குறித்த விவரங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் "மேம்படுத்தப்பட்ட செல்பீ கேமரா" இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது ஒன்பிளஸ் 15 மாடலில் உள்ள அதே செல்பீ கேமராவானது ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனிலும் இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒன்பிளஸ் 5ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ஆட்டோஃபோகஸ் ஆதரவு உடனான 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது ஒரு ஆர்-சீரிஸ் போனில் பேக் செய்யப்படும் மிகவும் மேம்பட்ட செல்பீ கேமரா ஆகும். நினைவூட்டும் வண்ணம் கடந்த ஆண்டு அறிமுகமான ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. ஆக 32எம்பி என்பது உண்மையிலேயே ஒரு பெரிய மேம்படுத்தல் ஆகும்.
மேலும் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவானது 30fps இல் 4K வீடியோக்களை பிடிக்கும் திறன் கொண்டதாகவும் இருக்கும். குறிப்பிடத்தக்க வகையில் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவானது 1080p வீடியோ ஆதரவை மட்டுமே வழங்கியது. ஆக இதுவும் ஒரு நல்ல மேம்படுத்தல் ஆகும்.
ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது DetailMax எஞ்சினுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது கைப்பற்றப்பட்ட படங்களை மேம்படுத்தும் மேம்பட்ட கணக்கீட்டு புகைப்பட வழிமுறைகளை வழங்குகிறது. ஒரே மெகாபிக்சல்-ஐ கொண்டிருந்தாலும் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவில் ஆம்னிவிஷன் (OmniVision) சென்சார் பொறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் சோனி IMX709 சென்சார் உள்ளது.
ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன? டிஸ்பிளேவை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு இருக்குமென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிப்செட்டை பொருத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப் உடன் இயங்கும்.
பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் 80W பாஸ்ட் சார்ஜிங் ஆடஹரவு கொண்ட 7400mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இதோடு ஆக்சிஜென் ஓஎஸ் 16 (OxygenOS 16), ஒரு பிளஸ் கீ, 4கே 120fps வீடியோ பதிவு ஆதரவுடன் 50எம்பி ரியர் கேமரா மற்றும் ஐபி68 / 69 ரேட்டிங் தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு பாடி ஆகிய அம்சங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
கடைசியாக இது பிளாக், க்ரீன் மற்றும் வயலட் ஆகிய 3 கலர்களில் அறிமுகம் செய்யப்படும். எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை, இந்தியாவில் இது ரூ.45,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது ஒன்பிளஸ் 15ஆர் விற்பனைக்கு வரும்போது வாங்கும் போது பயன்படுத்த ஒரு கிப்ட் கோட்-ஐ (OnePlus 15R Gift Code) அறிவித்துள்ளது. இந்த கிப்ட் கோட்-ன் விலை ரூ.149 ஆகும்.
ரூ.149க்கு ஒன்பிளஸ் 15ஆர்கிப்ட் கோட் வாங்கினால் என்ன கிடைக்கும்? ஒன்பிளஸ் வலைத்தளத்திலிருந்து நேரடியாக ரூ.149 க்கு ஒன்பிளஸ் 15ஆர் பரிசு குறியீட்டை வாங்கலாம் (ஏற்கனவே இது வாங்க கிடைக்கிறது). அதை தொடர்ந்து ஒன்பிளஸ் வலைத்தளத்தில் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனை வாங்கும்போது விண்ணப்பிக்கக்கூடிய 2 பரிசு குறியீட்டை பெறுவார்கள். அவைகள்:
1. ரூ.1,799 மதிப்புள்ள ஒன்பிளஸ் எவ்ரிடே ஸ்லிங் பேக் (OnePlus Everyday Sling Bag worth Rs 1,799)
2. ரூ.999 மதிப்புள்ள இரண்டு ஆண்டு பேட்டரி பாதுகாப்பு திட்டம் (Two year battery protection plan worth Rs 999)


Click it and Unblock the Notifications








