OnePlus சொன்ன ஒரு வார்த்தை.. மொத்தமா 7800mAh பேட்டரி.. 120W ஃபாஸ்ட் சார்ஜிங்.. டிசம்பருக்கு வெயிட்டிங் மோட்!
இந்திய மார்கெட்டில் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போன் அறிமுகமாகி ஒன்பிளஸ் பிரியர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவர்களுக்கு டபுள் ட்ரீட் வைத்தது போல ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போனின் வெளியீடு உறுதியாகி இருக்கிறது. இதனால், பட்ஜெட்டில் ஒன்பிளஸ் 15 சீரிஸ் மாடலை எதிர்பார்க்கும் பிரியர்கள் இப்போதே வெயிட்டிங் மோடுக்கு சென்றுவிட்டனர்.
சீன மார்கெட்டில் ஒன்பிளஸ் 15 மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6 ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளியாகிவிட்டன. இதில் ஒன்பிளஸ் 15 மட்டும் குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் நேற்று வெளியாகியது. இருப்பினும், பட்ஜெட் கூடுதலாக இருப்பதால், பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு மட்டுமே தகுந்ததாக இருந்தது. இதை சரி செய்ய ஒன்பிளஸ் 15ஆர் ரெடியாகிவிட்டது தெரிகிறது.

வருகிற டிசம்பர் மாதத்தில் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று நேற்றைய வெளியீட்டு நிகழ்வில் உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே, சீனாவில் வெளியான ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனே இந்தியாவில் ஒன்பிளஸ் 15ஆர் மாடலாக வெளியாகும் என்று கூறப்பட்டது. இதற்கு ஏற்ப ஒன்பிளஸ் 15 வெளியீட்டின் போதே 15ஆர் வருவது உறுதியானதால், அதையே எதிர்பார்க்க முடிகிறது.
ஆகவே, டிசம்பர் மாதத்தில் ஒன்பிளஸ் 15ஆர் இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். குறிப்பாக இது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை போல பிரீமியம் பட்ஜெட்டில் வெளியாகாது. மிட்-ரேஞ்ச் அல்லது அதைவிட கம்மியான பட்ஜெட்டிலேயே எதிர்பார்க்கலாம். ஏனென்றால், சீனாவில் வெளியான ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் ரூ.33,000 பட்ஜெட்டுக்குள் கிடைத்தது.
இந்தியாவில் ரூ.34,999 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கிடைத்தால், மேலும் மலிவான விலைக்கு கிடைக்கும். இப்போது, அந்த ஏஸ் 6 ஸ்மார்ட்போனில் கிடைத்த பீச்சர்களை பார்க்கலாம். இந்தியாவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு களமிறக்கப்படலாம். இருப்பினும், பெரும்பான பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆகவே, அதை பார்க்க வேண்டும்.
இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனில் 7800mAh பேட்டரி மற்றும் அதற்கு 120W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தும் IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP69K ரேட்டிங் கொடுக்கிறது. ஆகவே, பேட்டரி புரொடெக்சன் பீச்சர்கள் பக்காவாக இருக்கின்றன. 50 எம்பி மெயின் + 8 எம்பி அல்ட்ரா வைடு மட்டுமே வருகிறது.
ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைத்தது. ஆனால், இதில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மட்டுமே இருக்கிறது. ஆகவே, ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனிலும் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மட்டுமே எதிர்பார்க்கலாம். இதில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் கிடைத்தது.
ஆனால், குளோபல் வெர்ஷனில் இந்த சிப்செட் அல்லது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று கிடைக்க வாய்ப்புள்ளதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் ஓர்ஜின்ஓஎஸ் 16 (OxygenOS 16) மட்டுமே கிடைக்கும்.
ஏனென்றால், நேற்று வெளியான ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் சீன வெர்ஷனை போல கலர்ஓஎஸ் கொடுக்கப்படவில்லை. 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. டிசைனில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால், ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பேட்டரியில் மாற்றங்கள் இருக்கலாம். டிசம்பர் மாதம் நெருங்கும்போது அதிகாரப்பூர்வ பீச்சர்கள் தெரியவரும்.


Click it and Unblock the Notifications








