Home
Mobile

மீண்டும் மீண்டுமா.. 8000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் புது OnePlus போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 15 (OnePlus 15R) ஸ்மார்ட்போனை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். இது குறித்த தகவல்களை இந்த பதிவில்
சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதாவது ஒன்பிளஸ் இந்தியா வலைதளத்தில் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என்று டீசர் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை வெளியிடவில்லை அந்நிறுவனம். குறிப்பாக இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த ஒன்பிளஸ் 15ஆர் போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

இந்தியாவுக்கு வரும் புது OnePlus போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் 15ஆர் அம்சங்கள் (OnePlus 15R Specifications): 6.7-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz Refresh Rate), 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Gen 5 chipset) உடன் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) ஆதரவும் இந்த ஒன்பிளஸ் போனில் உள்ளது.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில உள்ளன. ஓர்ஜின்ஓஎஸ் 16 (OxygenOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் இயங்கும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

8000mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ்
செய்துவிட முடியும்.

எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (X-axis Linear Motor), என்எப்சி சப்போர்ட், 16ஜிபி வரை ரேம், 1டிபி வரை மெமரி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15R with 8GB RAM is available at 34 percent discount: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X