வந்த வேகத்தில் ரூ.4000 டிஸ்கவுண்ட்.. 7400mAh பேட்டரி புது OnePlus போன்.. ஒட்டுமொத்த இந்தியாவும் வாங்குமே!
ஒன்பிளஸ் நிறுவனம் இன்னும் சில தினங்களில், அதாவது வருகிற 2025 டிசம்பர் 17 ஆம் தேதி அன்று, அதன் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) மாடலை இந்தியாவிலும், பிற உலகளாவிய சந்தைகளிலும் அறிமுகம் செய்ய உள்ளது.
ஏற்கனவே - சிப்செட், பேட்டரி, ஐபி ரேட்டிங் உட்பட ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் பெரும்பாலான முக்கிய அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள், அவைகளின் விலை நிர்ணயம் மற்றும் விற்பனை சலுகைகள் குறித்த விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

ஒன்பிளஸ் 15ஆர் என்ன விலை? எக்ஸ் (X) தளம் வழியாக டெக் பிளாக்கர் ஆன பராஸ் குக்லானி (@passionategeekz) பகிர்ந்துள்ள விவரங்களின்படி, ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் என்கிற 2 ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும்.
512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் வேரியண்ட் ஆனது மிகவும் விலையுயர்ந்த வேரியண்ட் ஆக இருக்கும். இந்தியாவில் இதன் விலை ரூ. 52,000 ஆக நிர்ணயம் செய்யப்படும் என்று குக்லானி கூறுகிறார். மறுகையில் உள்ள பேஸிக் 256GB ஆப்ஷனின் விலை ரூ.47,000 முதல் ரூ.49,000 க்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் 15ஆர் ஆபர்கள்? ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனை வாங்கும் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுடன் ரூ.3,000 அல்லது ரூ.4,000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும் பராஸ் குக்லானி குறிப்பிட்டுள்ளார். ஆக ஒருவரால் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனை ஆபருக்கு பிறகு ரூ.45,000 பட்ஜெட்டிற்கு கொண்டுவர முடியும்.
மேற்கண்ட விலை நிர்ணயம் உண்மையாக இருந்தால் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனானது முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஸ்மார்ட்போனை விட கணிசமாக அதிக விலையில் அறிமுகப்படுத்தப்படும். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.42,999 என்கிற ஆரம்ப (12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ்) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன? டிஸ்பிளேவை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு இருக்குமென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிப்செட்டை பொருத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப் உடன் இயங்கும்.
பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் 80W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7400mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இதோடு ஆக்சிஜென் ஓஎஸ் 16 (OxygenOS 16), ஒரு பிளஸ் கீ, 4கே 120fps வீடியோ பதிவு ஆதரவுடன் 50எம்பி ரியர் கேமரா மற்றும் ஐபி68 / 69 ரேட்டிங் தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு பாடி ஆகிய அம்சங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் ஒன்பிளஸ் 15 மாடலில் உள்ள அதே செல்பீ கேமராவானது ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனிலும் இடம்பெறும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ஆட்டோஃபோகஸ் ஆதரவு உடனான 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது ஒரு ஆர்-சீரிஸ் போனில் பேக் செய்யப்படும் மிகவும் மேம்பட்ட செல்பீ கேமரா ஆகும். நினைவூட்டும் வண்ணம் கடந்த ஆண்டு அறிமுகமான ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. ஆக 32எம்பி என்பது உண்மையிலேயே ஒரு பெரிய மேம்படுத்தல் ஆகும்.
மேலும் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவானது 30fps இல் 4K வீடியோக்களை பிடிக்கும் திறன் கொண்டதாகவும் இருக்கும். கூடவே இது DetailMax எஞ்சினுடன் பொருத்தப்பட்டுள்ளது. ஒரே மெகாபிக்சல்-ஐ கொண்டிருந்தாலும் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவில் ஆம்னிவிஷன் (OmniVision) சென்சார் பொறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் சோனி IMX709 சென்சார் உள்ளது.


Click it and Unblock the Notifications








