Home
Mobile

நாளை இந்தியாவில் விற்பனைக்கு வரும் புது OnePlus 5ஜி போன்.. 7400mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் முதல் முறையாக நாளை (டிசம்பர் 22) விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நாளை மதியம் 12 மணி அளவில் அமேசான், ஒன்பிளஸ் இந்தியா ஆன்லைன் ஸ்டோர், மற்றும் ஆப்லைன் தளங்களில் விற்பனைக்கு வரும்.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.47,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி வேரியண்ட்டின் அசல் விலை ரூ.52,999-ஆக உள்ளது. ஆனால் அறிமுக சலுகையின் கீழ் முறையே ரூ.3000 மற்றும் ரூ.5000 பேங்க் ஆபர் (ஆக்சிஸ் மற்றும் எச்டிஎப்சி) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி ஆப்ஷனின் விலையை ரூ.44,999 ஆகவும், ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி ஆப்ஷனின் விலையை ரூ.47,999 ஆகவும் குறைக்க முடியும்.

நாளை இந்தியாவில் விற்பனைக்கு வரும் புது OnePlus 5ஜி போன்..

ஒன்பிளஸ் 15ஆர் அம்சங்கள் (OnePlus 15R Specifications): 6.83-இன்ச் 1.5கே அமோல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3200 டச் சாம்ப்ளிங் ரேட் , கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன், 1800 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் உடன் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதுவும் இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்சிஜன்OS 16 (OxygenOS 16) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் ஐபி ரேட்டிங்கை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது உயர்மட்ட IP66, IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங்களை பெற்றுள்ளது. இது தூசி மற்றும் தண்ணீரிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 7400mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் பைபாஸ் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த போன்.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்906 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன். குறிப்பாக இந்த கேமராக்கள் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது.

நாளை இந்தியாவில் விற்பனைக்கு வரும் புது OnePlus 5ஜி போன்..

In-display Ultrasonic Fingerprint Sensor (அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. சார்கோல் பிளாக், எலக்ட்ரிக் வயலட் மற்றும் மின்ட் க்ரீன் நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, ப்ளூடூத் 6.0, ஜிபிஎஸ், கலிலியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15R phone will go on sale for the first time tomorrow in india
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X