நோட் பண்ணுங்க தேதி குறிச்சாச்சு.. 7000mAh பேட்டரி, 165Hz டிஸ்பிளே, Snapdragon 8 Elite உடன் புது OnePlus போன்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் 7000எம்ஏஎச் பேட்டரி, 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz Refresh Rate) உடனான டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் உட்பட பல முக்கிய அம்சங்களை கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. என்ன மாடல்? எப்போது அறிமுகம்? என்னனென்ன அம்சங்கள்? என்ன விலை? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.
என்ன மாடல்? அது ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போனாகும். இது கடந்த ஜனவரி மாதம் ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மாடலுடன் சேர்ந்து மற்றும் அதன் "மலிவு விலை விருப்பமாக" அறிமுகமான ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) மாடலின் "அப்கிரேடட் வெர்ஷன்" ஆகும்.

4 ஆம் எண் மீதிருக்கும் அச்சம் (சீன கலாச்சாரத்தில் எதிர்மறையான அர்த்தத்தை கொண்டிருப்பதன்) காரணமாக ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது ஒன்பிளஸ் 14 (OnePlus 14), ஒன்பிளஸ் 14ஆர் (OnePlus 14R), ஒன்பிளஸ் 14டி (OnePlus 14T), ஒன்பிளஸ் 14எஸ் (OnePlus 14s) என எந்த மாடல் பெயரையும் தேர்வு செய்யாமல்.. நேரடியாக ஒன்பிளஸ் 15 சீரீஸ் (OnePlus 15 Series) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளதால்.. ஒன்பிளஸ் 13ஆர் மாடலுக்கு அடுத்ததாக ஒன்பிளஸ் 15ஆர் தான் அறிமுகமாகும்.
என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? எக்ஸ் தளம் வழியாக @Gadgetsdata வழியாக லீக் ஆன சில விவரங்களின்படி, ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உடனான, ஒரு பிளாட் ஆன ஓஎல்இடி டிஸ்பிளேவை (Flat OLED Display) கொண்டிருக்கும்.
இந்த டிஸ்பிளே 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், ஒன்பிளஸ் 13ஆர் மாடலில் உள்ள 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் ஒப்பிடும் போது இது ஒரு பெரிய அப்டேட் ஆக இருக்கும்.
ஒன்பிளஸ் 15ஆர் சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட்டை பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது ஒன்பிளஸ் 13 (OnePlus 13), ஷாவ்மீ 15 (Xiaomi 15) மற்றும் ஐக்யூ 13 (iQoo 13) போன்ற ஸ்மார்ட்போன்களில் உள்ள பிளாக்ஷிப் சிப்செட்டா ஆகும்.
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ப்ரைமரி (Primary), அல்ட்ராவைடு (Ultrawide) மற்றும் டெலிஃபோட்டோ (Telephoto) லென்ஸ் உள்ளிட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்டனின் சிறப்பம்சம் ஆக இதன் 7000mAh க்கும் அதிகமான மதிப்பிடப்பட்ட பெரிய பேட்டரி (7000mAh Battery) இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடைசியாக ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை (Ultrasonic fingerprint scanner) பேக் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரவிருக்கும் இந்த ஒன்பிளஸ ஸ்மார்ட்போனில் ஒரு மெட்டல் ஃபிரேம் (Metal Frame) இருக்கலாம் என்று மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டர் கூறுகிறார்.
எப்போது அறிமுகம்? என்ன விலை? ஒன்பிளஸ் 15ஆர் ஆனது ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பே (2025 டிசம்பர் மாத வாக்கில்) சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.55,000 - ரூ.60,000 என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ55,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








