அதே டிசைன்.. ஆனா ரூ.28000 விலை கம்மி.. புது OnePlus போன்.. 8000mAh பேட்டரி, 16GB ரேம், 100W சார்ஜிங்!
ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் ஏஸ் 6டி (OnePlus Ace 6T) ஸ்மார்ட்ப்பனை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. சீனாவில் இது ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஆக அறிமுகமாகும் இந்த மாடல் இந்தியா மற்றும் உலகளவில் ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஆக வெளியிடப்படும்.
இதற்கிடையில் ஒன்பிளஸ் ஏஸ் 6டி அல்லது ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் டிசைன், முக்கிய அம்சங்கள், விலை ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. டிப்ஸ்டர் இவான் பிளாஸ் வழியாக லீக் செய்யப்பட்டுள்ள ரெண்டர்களின் வழியாக - ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது லேட்டஸ்ட் ஒன்பிளஸ் 15 மாடலின் டிசைனை பின்பற்றும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

அதாவது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை போலவே ஒரு தட்டையான பிரேம் டிஸைனுடன் வரும் என்பதை ரெண்டர்கள் காட்டுகின்றன. பேக் பேனலில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட டேப்லெட் வடிவ கேமரா யூனிட் உள்ளது. முன்பக்கத்தில் செல்பீ கேமராவிற்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட் மற்றும் சில மெல்லிய பெசல்களையும் பார்க்க முடிகிறது
இடது பக்கத்தில் ஒரு பிரத்யேக பிளஸ் கீ உள்ளது. வால்யூம் ராக்கர் மற்றும் பவர் ஆன்/ஆஃப் பட்டன் வலது பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன என்பதையும் லீக் ஆன ரெண்டர்கள் வெளிப்படுத்துகின்றன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா அமைப்புடன் வரக்கூடும் என்பதையும் ரெண்டர் வெளிப்படுத்தியுள்ளது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை - ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Gen 5) சிப்செட் மூலம் இயக்கப்படும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிப்செட் 16 ஜிபி ரேம் உடன் இணைக்கப்படலாம்
ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போனின் சில அதிகாரப்பூர்வ டீஸர்களையும் ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன் 165எப்பிஎஸ் அல்ட்ரா-ஹை பிரேம் ரேட்டை ஆதரிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்ட 8000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 15ஆர் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இந்தியாவில் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,999 இல் இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் சில நாட்களுக்கு முன்னர் அறிமுகமான ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.72,999 ஆகும்.அதாவது ஒன்பிளஸ் 15ஆர் மாடலின் எதிர்பார்க்கப்படும் விலையை விட சுமார் ரூ.28,000 குறைவாகும்.
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஆனது 165 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட், 1.5கே (1272 x 2772 பிக்சல்ஸ்) ரெசல்யூஷன், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 330 ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 100 சதவீதம் டிசிஐ-பி3 கலர் கேமட் மற்றும் 1.07 பில்லியன் கலர்களுக்கான ஆதரவு உடனான 6.78-இன்ச் மூன்றாம் தலைமுறை பிஓஇ பிளெக்சிபில் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஆனது அட்ரெனோ 840 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காமின் ஆக்டா-கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் 2 பெர்பார்மென்ஸ் கோர்கள் மற்றும் 6 எபிஷியன்ஸி கோர்களை கொண்டுள்ளது. மேலும் 4.608ஜிகாஹெர்ட்ஸ் பீக் கிளாக் ஸ்பீடையும் வழங்குகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் அல்ட்ரா பிளஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 24மிமீ ஃபோக்கல் லெங்த் உடனான 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா + 50-மெகாபிக்சல் (எப்/1.8) டெலிஃபோட்டோ கேமரா உள்ளன. இதன் ரியர் கேமரா யூனிட்டால் 30 எப்பிஎஸ்-இல் 8கே வீடியோக்களை படமாக்க முடியும். முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஸ்மாட்போன் ஆனது 7300mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 120W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவுடன் வருகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது சுமார் 39 நிமிடங்களில் 0 சதவீதத்திலிருந்து முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications








