டிசம்பர் 17 உறுதி.. 7800mAh பேட்டரி.. IP69K ரேட்டிங்.. இந்தியாவுக்கு வரும் புது OnePlus போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது வரும் வரும் டிசம்பர் 17-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒன்பிளஸ் பேட் 2 மாடலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ஒன்பிளஸ் 15ஆர் போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஒன்பிளஸ் 15ஆர் அம்சங்கள் (OnePlus 15R Specifications): ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Gen 5 chipset) உடன் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது.

அதுவும் 6.7-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz Refresh Rate), 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
குறிப்பாக IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) ஆதரவும் இந்த ஒன்பிளஸ் போனில் உள்ளது.
இந்த போனில் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன. ஓர்ஜின்ஓஎஸ் 16 (OxygenOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் இயங்கும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

7800mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (X-axis Linear Motor), என்எப்சி சப்போர்ட், 16ஜிபி வரை ரேம், 1டிபி வரை மெமரி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த புதிய ஒன்பிளஸ் 15ஆர் போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








