Home
Mobile

எப்படிலாம் வியாபாரம் பண்றான்.. ரூ.149 க்கு Gift Code விற்கும் OnePlus நிறுவனம்.. புது 7400mAh போனுக்காக!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் புதிய மிட்ரேன்ஜ் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆக ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) மாடல், இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஒன்பிளஸ் 15 க்கு அடுத்தபடியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஸ்மார்ட்போன் ஆகும்.

இது உலகிலேயே - குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 5 SoC) உடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 120fps கேமிங்கை வழங்கும் என்பதும், இதில் ஒரு பெரிய 7400mAh பேட்டரி இடம்பெறும் என்பதும் கூட உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரூ.149 க்கு Gift Code விற்கும் OnePlus நிறுவனம்!

மேலும் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது IP66, IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங் உடன் வரும் என்பதும், அதன் விலைப்பிரிவில் 4கே 120 எப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங்கை (4K 120fps video recording) வழங்கும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதும் கூட அதிகாரப்பூரவமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அறிமுக தேதி மிகவும் நெருக்கமாக உள்ள நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது ஒன்பிளஸ் 15ஆர் விற்பனைக்கு வரும்போது வாங்கும் போது பயன்படுத்த ஒரு கிப்ட் கோட்-ஐ (OnePlus 15R Gift Code) அறிவித்துள்ளது. இந்த கிப்ட் கோட்-ன் விலை ரூ.149 ஆகும்.

ரூ.149க்கு ஒன்பிளஸ் 15ஆர்கிப்ட் கோட் வாங்கினால் என்ன கிடைக்கும்? ஒன்பிளஸ் வலைத்தளத்திலிருந்து நேரடியாக ரூ.149 க்கு ஒன்பிளஸ் 15ஆர் பரிசு குறியீட்டை வாங்கலாம் (ஏற்கனவே இது வாங்க கிடைக்கிறது). அதை தொடர்ந்து ஒன்பிளஸ் வலைத்தளத்தில் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனை வாங்கும்போது விண்ணப்பிக்கக்கூடிய 2 பரிசு குறியீட்டை பெறுவார்கள்

1. ரூ.1,799 மதிப்புள்ள ஒன்பிளஸ் எவ்ரிடே ஸ்லிங் பேக் (OnePlus Everyday Sling Bag worth Rs 1,799)
2. ரூ.999 மதிப்புள்ள இரண்டு ஆண்டு பேட்டரி பாதுகாப்பு திட்டம் (Two year battery protection plan worth Rs 999)

இப்போதைக்கு ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது வருகிற டிசம்பர் 17, 2025 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான விற்பனை தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. வெளியீடு முடிந்த பின்னர் விலையோடு சேர்த்து விற்பனை தேதி மற்றும் விற்பனை சலுகைகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும்.

ஒன்பிளஸ் 15ஆர் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் (OnePlus 15R Price in India Expected)? நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில், ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.42,999 க்கு அறிமுகமானது. ஆக பெரும்பாலும் ஒன்பிளஸ் 15ஆர் ஆனது ரூ.45,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் இருக்கும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இது ரூ.44,999 அறிமுகம் செய்யப்படலாம்.

முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் எல்டிபிஓ டிஸ்பிளே
- 1264 x 2780 பிக்சல்ஸ்,
- 93.9% ஸ்க்ரீன்-டூ-பாடி
- 450பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்

- ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார்
- 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15R Gift Code For Rs 149 Announced Ahead India Launch on December 17
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X