Home
Mobile

7400mAh பேட்டரி, 80W சார்ஜிங், IP69K எல்லாம் போச்சே.. இரவோடு இரவாக விலை ஏற்றப்பட்ட லேட்டஸ்ட் OnePlus 5ஜி போன்!

ஏப்ரல் 2026 இல் ஸ்மார்ட்போன்கள் மீதான விலை உயர்வுகள் - ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் கடந்த சில வாரங்களாகவே அனைத்து புதிய போன்களிலும், ஏற்கனவே உள்ள போன்களிலும் கூட நாம் விலை உயர்வை காண்கிறோம். உதிரி பாகங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், அதை ஈடுசெய்ய உற்பத்தியாளர்கள் ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்த வேண்டியுள்ளது.

அந்த வரிசையில் தற்போது, ​​ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ஒன்பிளஸ் 15ஆர் மாடலும் இணைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை "இரவோடு இரவாக" ரூ.2,500 உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.4,000 உயர்த்தப்படும் என்று வதந்தி பரவியது, ஆனால் அது நடக்கவில்லை.

இரவோடு இரவாக விலை ஏற்றப்பட்ட லேட்டஸ்ட் OnePlus 5ஜி போன்!

ஆனால் இந்த முறை எந்த வதந்திகளும் இல்லாமல், நேரடியாக ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் "அதிகரிக்கப்பட்ட புதிய விலை" ஆனது ஒன்பிளஸ் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (OnePlus India Official Webiste) மற்றும் பிற தளங்களில் பிரதிபலிக்கிறது.

பழைய விலை என்ன, புதிய விலை என்ன? நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இந்தியாவில் ரூ. 47,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது விலை உயர்வுக்கு பிறகு இது ரூ.50,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், முன்னதாக ரூ. 52,999 க்கு விற்கப்பட்ட ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட், தற்போது ரூ.55,499 க்கு வாங்க கிடைக்கிறது.

OPINION: தற்போது விலை அதிகமாக இருந்தாலும் கூட, ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது, இன்றும் அதன் பிரிவில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த போன்களில் ஒன்றாக (குறிப்பாக கேமிங்கிற்கு) திகழ்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே, பேட்டரி, கேமரா, சிப்செட், ஐபி ரேட்டிங் என கிட்டத்தட்ட எல்லா அம்சங்களும் "கொடுக்குற காசுக்கு வொர்த்" ஆகவே உள்ளன!

- 165Hz ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடனான 6.83-இன்ச் 1.5K LTPS AMOLED டிஸ்பிளே.
- 80W சூப்பர்VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடனான 7400mAh பேட்டரி.
- 50MP ப்ரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 32MP செல்பீ கேமரா
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட்
- ஐபி66, ஐபி68, ஐபி69, மற்றும் ஐபி69கே தரமதிப்பீடுகள்.

செயல்திறன் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் ஹார்ட்வேர் தன்னைபற்றி தானே பேசும் என்றுதான் கூற வேண்டும். இதன் 165ஹெர்ட்ஸ் பிளாட் டிஸ்ப்ளே, கேமிங் ஸ்மார்ட்போன் பிரிவில் ஒரு சிறந்த போட்டியாளராக விளங்குகிறது, மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கேம்களுக்கு 165FPS-ஐயும் வழங்குகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் நீண்ட நேரம் கேம் விளையாடுவதற்காக 7400mAh திறன் கொண்ட பெரிய பேட்டரியும், விரைவாக சார்ஜ் ஏசெய்வதற்கான 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் ஆனது ஃபிளாக்ஷிப் மாடலான 8 எலைட் ஜென் 5-க்கு சற்று கீழே இருந்தாலும், மிகச்சிறந்த செயல்திறனை வழங்குகிறது.

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது IP66, IP68, IP69 மற்றும் IP69K தரமதிப்பீடுகளை கொண்டுள்ளது, இது தூசி மற்றும் தண்ணீருக்கு எதிராக அதிக நீடித்து உழைக்கும் தன்மையை அளிக்கிறது. கேமராக்களில் பன்முகத்தன்மை இல்லாததால், ஒன்பிளஸ் 15ஆர் ஆனது அவ்வளவாக சிறந்து விளங்கவில்லை. இருப்பினும், சாதாரண புகைப்படங்களுக்கு இது நன்றாகவே செயல்படும்.

ஒட்டுமொத்தமாக புதிய விலையின் கீழும் கூட ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஒரு நல்ல தேர்வாகவே உள்ளது, குறிப்பாக உங்கள் பட்ஜெட்டை அதிகம் மீறாமல், பெர்பார்மென்ஸை மையமாக கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை நீங்கள் விரும்பினால் இது இன்னமும் கூட ஒரு நல்ல தேர்வாகும். இருப்பினும், கேமராக்கள் உங்கள் முன்னுரிமைகளில் ஒன்றாக இருந்தால், நீங்கள் மற்ற ஸ்மார்ட்போன்களை. அதே சிப்செட் மற்றும் கிட்டத்தட்ட அதே மாதிரியான அம்சங்களுடன் ஐக்யூ 15ஆர் உள்ளது. இது ரூ. 44,999 என்கிற குறைந்த விலையிலும் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15R gets Rs 2500 Price Hike in India Now Selling At Starting Price Above Rs 50000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X